முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட் வர்ணனையாளர் டோனி கோசியர் மரணம்

வியாழக்கிழமை, 12 மே 2016      விளையாட்டு
Image Unavailable

அடிலெய்ட் : பன்முக திறன் கொண்டவரும், கிரிக்கெட்டின் குரல் என்று அனைவராலும் போற்றப்பட்டவருமான மேற்கு இந்திய தீவை சேர்ந்த வர்ணனையாளர் டோனி கோசியர் உடல்நிலை பாதிப்பால் மரணம் அடைந்தார்.

கிரிக்கெட்டின் குரல் என்று அனைவராலும் போற்றப்பட்ட வர்ணனையாளர் டோனி கோசியர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவருக்கு 75 வயது. சமீபகாலமாக கழுத்து, கால் பகுதியில் ஏற்பட்ட கிருமி தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டார். இதன் காரணமாக மரணம் அடைந்தார்.

வெஸ்ட்இண்டீசை சேர்ந்த டோனி கோசியர் கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். எழுத்தாளரர், பத்திரிகையாளர், வர்ணனையாளர் என பன்முக திறன் கொண்டவராக திகழ்ந்தார். 1965–ல் வெஸ்ட்இண்டீஸ் அணி ஆஸ்திரேலியா சென்றது. அப்போது தான் அவர் தனது வர்ணனையாளர் பணியை தொடங்கினார். சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இவரது குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. டோனி கோசியர் மறைவுக்கு ஐ.சி.சி. மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்