முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ், முதல்கட்ட கவுன்சிலிங் முடிந்தது: 2-ம் கட்ட கலந்தாய்வு எப்போது?

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜூன் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை : எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிந்தது. இதில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள 2,785 எம்.பி.பி.எஸ் இடங்கள், 78 பிடிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல்கட்ட கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கடந்த 20-ம் தேதி தொடங்கியது. முதல் நாள் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடந்தது.

இதில் 69 மாணவர்கள் கல்லூரிகளில் சேரு வதற்கான அனுமதிக் கடிதம் பெற்றனர். பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 21-ம் தேதி தொடங் கியது. இதில் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்த 10 மாணவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரியை (எம்எம்சி) தேர்வு செய்தனர். அவர்களுக்கு எம்எம்சியில் சேருவதற்கான அனுமதிக் கடிதத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார்.

பொதுப் பிரிவினருக்கான கடைசி நாள் (5-ம் நாள்) கலந்தாய்வு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு தொடங்கியது. கலந்தாய்வில் பங்கேற்க 534 மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அனைத்து மாணவர்களும் இதில் கலந்துகொண்டனர். பிற்பகல் வரை நடந்த கலந்தாய்வு முடிவில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க 431 மாணவர்களுக்கும், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பிடிஎஸ் படிக்க 78 மாணவர்களுக்கும் அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.

முதல்கட்ட கலந்தாய்வு முடிவில் தமிழக அரசு ஏற்று நடத்தும் கோயம்புத்தூர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி உட்பட 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,318 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மாநில அரசுக்கான 65 எம்பிபிஎஸ் இடங் கள் நிரம்பின. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 85 பிடிஎஸ் இடங்களில் 78 இடங்கள் நிரப்பப்பட்டன. இவை தவிர, 7 தனியார் (சுயநிதி) கல்லூரிகளில் மாநில அரசுக்கான 474 எம்பிபிஎஸ் இடங்களில் 402 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. முதல்கட்ட கலந்தாய்வில் அரசு மற்றும் தனியார் கல்லூரி களில் 2,785 எம்பிபிஎஸ் இடங்கள், 78 பிடிஎஸ் என மொத்தம் 2,863 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 

மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு செயலாளர் செல்வராஜன் கூறியதாவது:
முதல்கட்ட கலந்தாய்வு முடிந்ததைத் தொடர்ந்து, 7 தனியார் (சுயநிதி) மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 72 எம்பிபிஎஸ் இடங்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 7 பிடிஎஸ் இடங்கள் எஞ்சியுள்ளன. இந்த இடங்கள் மற்றும் 17 தனியார் (சுயநிதி) பல் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசுக்கான 970 பிடிஎஸ் இடங்கள் 2-ம்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படும்.

2-ம் கட்ட கலந்தாய்வு தொடங்கும் தேதி ஜூலை 2-வது வாரத்தில் அறிவிக்கப்படும். மருத்துவக் கல்லூரிகளில் முதலாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்