முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காய்கறி விலை வீழ்ச்சியால் பொதுமக்கள் மகிழ்ச்சி

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2016      வர்த்தகம்
Image Unavailable

சென்னை  - சென்னையில் காய்கறி விலை வீழ்ச்சி, பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வரத்து அதிகரிப்பால், கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்றைய நிலவரப்படி தக்காளி, முட்டைகோஸ் கிலோ ரூ.6-க்கும், பீட்ரூட், வெண்டைக்காய் தலா ரூ.8-க்கும், கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.10-க்கும் விற்கப்படுகிறது.  காய்கறி விலை குறைந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தங்களுக்கு போதிய வருவாய் கிடைக்கவில்லை என மொத்த, சில்லறை வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதுதொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, ‘‘வெளி மாநிலங்களில் இருந்து வரும் தக்காளியில் குறைந்த அளவே லாபம் வைத்து விற்க முடிகிறது. கூடைகளை ஏற்றி, இறக்கும் தொழிலாளிக்குகூட கூலி கொடுக்க முடியாத நிலை உள்ளது’’ என்றார்.  ஜாம்பஜார் மார்க்கெட்டில் சில்லறை விலையில் காய்கறி விற்கும் முகமது அலியிடம் கேட்டபோது, ‘‘முன்பு பல காய்கறிகள் ரூ.30 முதல் ரூ.80 வரை விற்றது. இப்போது எல்லா காய்கறிகளும் ரூ.10 முதல் ரூ.20 அளவிலேயே விற்கப்படுகிறது. அதனால் போதிய வருவாய் கிடைக்கவில்லை என்று கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்