முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் நிறைவேறிய இந்து திருமண மசோதா

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2016      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பத்து மாத கால தொடர் விவாதங்களுக்கு பிறகு பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ்சபையில் இந்து திருமண மசோதா நிறைவேறியது. இதன் மூலம் இந்து சிறுபான்மை தம்பதியர் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும். பாகிஸ்தான் மக்கள் தொகையில் 1.6 சதவீதம் பேர் இந்துக்கள். நாடு சுதந்திரம் அடைந்த நாள் முதல், அவர்களுக்கு என தனியாக திருமண பதிவு சட்டங்கள் எதுவும் இல்லாமல் இருந்து வந்தது. இதன் மூலம் அவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் கீழ்சபை இந்து திருமண மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவை செனட் சபையும் தாமதமின்றி விரைவில் நிறைவேற்றும். இதன் மூலம் இந்து தம்பதியர் தங்களது திருமணத்தை சட்டப்பூர்வமாக பதிவு செய்து கொள்ள முடியும். இதன்மூலம் இந்து பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். பாகிஸ்தான் பாராளுமன்ற வரலாற்றில் இந்த சம்பவம் ஒரு சிறப்பான தருணமாக பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்