முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை....!

திங்கட்கிழமை, 21 நவம்பர் 2016      வாழ்வியல் பூமி
Image Unavailable

தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால்தான் சாப்பிட்ட திருப்திகிடைக்கிறதா? உங்களுக்குத்தான் இந்தப் பதிவு...... இன்று தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு, குற்றாலம் பார்டர் பரோட்டா, விருதுநகர் பரோட்டா தூத்துக்குடி பரோட்டா ,கொத்துப் பரோட்டா ,சில்லிப் பரோட்டா சொல்லும்போதே நாவில் நீர் ஊருமே . பின்னாடி படிங்க!....

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் ஒரு பதார்த்தம். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?
மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டித், திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள். பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை துடங்குகிறது.பரோட்டா மட்டுமல்லாது நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக் உட்பட இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதா வில் இருந்து தயாரிக்கபடுகிறது ,

மைதா எப்படித் தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கப்பட்டக் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பனசாயல் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மை யாக்குகிறார்கள்,அதுவே மைதா. Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டை யில் உள்ள ரசாயனம் இந்த ராசாயினம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரழிவிற்குக் காரணமாகிறது .

இது தவிர Alloxan என்னும் ராசாயனம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப் படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது . இந்த Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரழிவு நோய் வரவழைப்பதற்குப் பயன்படுகிறது ,ஆக பரோட்டா வில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரழிவு வர துணை புரிகிறது . மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா சீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரண சக்தியை குறைத்து விடும் .

இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதா வினால் செய்த bakery பண்டங்களை உண்பதைத் தவிர்ப்பது நல்லது. மைதாவை நாம் உட்கொள்ளும் போது சிறுநீரகக் கோளாறுகள் ,இருதய கோளாறு ,நீரழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . மைதாவின் தீமைகள் குறித்து நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஆராச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர். முதுகுத்தண்டுக் கோளாறு, ருமாடிசம், ஆர்தரடிஸ், வாய்வுத் தொல்லை போன்ற நோயினால் அவதிப்படும் நண்பர்கள், தயவு செய்து பரோட்டாவைப் பார்க்கக் கூடச் செய்யாதீர்கள். பரோட்டா மலச்சிக்கலை ஏற்படுத்தி வாதத்தன்மையை அதிகப்படுத்தும். நாமும் விழித்துக் கொள்வோம் நம் தலைமுறை காப்போம்.
நண்பர்களே ஆரோக்கியமான நம் பாரம்பரிய கேப்பை, தினை,கம்பு உட்கொண்டு அந்நிய உணவான பரோட்டாவை புறம் தள்ளுவோம

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!