Idhayam Matrimony

புதுச்சேரியில் இன்று சர்வதேச திரைப்பட விழா தொடக்கம்

புதன்கிழமை, 11 பெப்ரவரி 2026      தமிழகம்
Pudhucherry-2023-03-23

புதுச்சேரி, புதுச்சேரி அரசின் சார்பில் ஆண்டுதோறும் திரைப்பட விழா நடைபெறும். இந்த ஆண்டு திரைப்பட விழா சர்வதேச திரைப்பட விழாவாக மாற்றம் பெற்றுள்ளது. விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. சர்வதேச திரைப்பட விழாவுக்கான லோகோ வெளியிடப்பட்டது

இதனை சட்டசபையில் உள்ள தனது அறையில் முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார். அப்போது, விருது பெறும் இயக்குநர்களின் பெயர் பட்டியலை அவர் வெளியிட்டார். 2024-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்துக்கான விருது கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிதர்தண்டா டபுள் எக்ஸ், 2025-ம் ஆண்டுக்கான சிறந்த திரைபடத்துக்கான விருது தினேஷ் செல்வராஜ் இயக்கிய கடல்கன்னி ஆகிய தமிழ் திரைப்படங்களுக்கு வழங்கப்படுகிறது.

இன்று மாலை கடற்கரைச் சாலையில் தொடக்க விழா மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அப்போது 2024 மற்றும் 2025 ஆண்டுகளுக்கு புதுவை அரசின் சார்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் திரைப்பட இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், தினேஷ் செல்வராஜ் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது.

விழாவில் திரைப்பட நடிகைகள் ரேவதி, சுனைனா, திரைப்பட இயக்குநர்கள், பா.ரஞ்சித், தினேஷ் செல்வராஜ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். தொடர்ந்து திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கிய "நட்சத்திரம் நகர்கிறது' என்ற திரைப்படம் திரையிடப்படுகிறது. சர்வதேச திரைப்பட விழாவையொட்டி புதுவை அலையான்ஸ் பிரான்சிஸ் அரங்கில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாள்களும் சர்வதேச திரைப்படங்கள் நாளுக்கு 2 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன.

குறிஞ்சி நகரில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கத்தில் பிப்ரவரி 13, 14 மற்றும் 15 ஆகிய 3 நாட்கள் குழந்தைகளுக்கான திரைப்படங்கள் நாளுக்கு 3 திரைப்படங்கள் வீதம் திரையிடப்பட உள்ளன. மொத்த 12 தமிழ் திரைப்படங்கள் உள்பட 45 திரைபடங்கள் திரையிடப்படுகின்றன. திரைப்படங்களைக் காண விரும்புபவர்கள் புதுவை பிலிம் பெஸ்டிவெல் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து