எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற அரசு செவிலிய பட்டமளிப்பு விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு, செவிலிய மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கி விழா பேரூரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை பட்டம் முடித்த மருத்துவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது போலவே செவிலியர்களுக்கும் பட்டமளிப்பு விழா நடத்திட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு தொடங்கி செவிலியர்களுக்குமான பட்டமளிப்பு விழா என்பது தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாவது ஆண்டாக பட்டமளிப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்திருக்கிறது. இன்று டிப்ளமோ நர்சிங் 949 பேர், பி.எஸ்.சி நர்சிங் 75 பேர், எம்.எஸ்.சி நர்சிங் 64 பேர் உள்ளிட்ட மொத்தம் 1,100 பேர் பட்டம் பெற்றிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 6 அரசு செவிலியர் கல்லூரிகளும், 25 செவிலியர் பயிற்சி பள்ளிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது. அரசு செவிலியர் கல்லூரிகளைப் பொறுத்தவரை பி.எஸ்.சி நர்சிங் 450 மாணவர்களும்,பேசிக் நர்ஸிங் 80 மாணவர்களும், முதுகலை பட்டப்படிப்பு 101 மாணவர்களும் பயின்று வருகிறார்கள். 25 செவிலியர் பயிற்சி பள்ளிகளில் 2,060 பேர் பயின்று வருகிறார்கள். இவர்கள் பெரும்பகுதியானவர்கள் முதலமைச்சரின் நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப் பெண் ஆகிய திட்டங்கள் மூலம் பயன்பெறுவபர்களாக இருந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பிறப்புகளுக்கு மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் என்பது இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு ஒரு லட்சத்திற்கு 90 ஆக இருந்தது. அது தற்போது 39.5 ஆக குறைந்திருக்கிறது. மகப்பேறு இறப்பு விகிதம் பாதிக்கும் குறைந்து இருப்பது பெரிய அளவிலான சாதனையாக உள்ளது. இதில் செவிலியர்களின் பங்களிப்பு என்பது மிக முக்கியமானது ஆகும். அதேபோல் குழந்தை மரண விகிதம் பொறுத்தவரை 1,000 குழந்தை பிறப்புகளுக்கு 10.4 ஆக இந்த அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு வரை இருந்தது, தற்போது 7.7 ஆக உள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு 8,834 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநிரந்தர ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் 3,009 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணிநியமனம் செய்யப்பட்ட 3,260 பேரில் 2,146 செவிலியர்களுக்கு ஏற்கெனவே பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது. அதில் 390 பேர் பணிக்கு வரவில்லை.
இந்த நிலையில் மீதமிருந்த 719 பேருக்கு பணிநியமனம் வழங்க வேண்டும் என்கின்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்தது. அவர்கள் பணியாற்றிய நாட்கள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கொரோனா காலத்தில் பணிபுரிந்த 719 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகள் முதல்வரின் வழிகாட்டுதலோடு வழங்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் செவிலியர்களின் தேவை அதிகரித்து வரும் காரணத்தினாலும், செவிலியர் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உலகெங்கும் வேலை வாய்ப்பு அதிகரித்து வருவதாலும் முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலோடு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நிதி ஆதாரத்தோடு 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் தமிழ்நாட்டில் தொடங்கப்படவிருக்கிறது. திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இருக்கின்ற மருத்துவக் கல்லூரிகளில் செவிலியர் கல்லூரிகள் தொடங்கப்படவிருக்கிறது. இந்த 6 செவிலியர் கல்லூரிகளும் உலகத் தரத்திற்கு இணையாக உருவாக்கப்படவிருக்கிறது. அதற்கான பணிகள் தொடங்கப்படவிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தங்கம், வெள்ளி விலை உயர்வு
09 Feb 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்து விற்பனையானது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –09-02-2026
09 Feb 2026 -
மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்: வி.சி.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு
09 Feb 2026சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், வி.சி.க.
-
குரூப் 2, 2ஏ தேர்வில் குளறுபடி எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி. புதிய கட்டுப்பாட்டு அலுவலராக வெங்கடபிரியா நியமனம்
09 Feb 2026சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடக்க இருந்த டி.என்.பி.எஸ்.சி.
-
சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு: மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இன்று ஆலோசனை
09 Feb 2026சென்னை, சட்டசபை தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு குறித்து மாவட்ட செயலாளர்களுடன் இன்று த.வெ.க. தலைவர் விஜய் ஆலோசனை நடத்துகிறார்.
-
தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் சட்டசபை தேர்தலா..? பா.ஜ.க. நிர்வாகி சூசக தகவலால் பரபரப்பு
09 Feb 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் பேரவைத் தேர்தல் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளதாக பா.ஜ.க. தேசிய அமைப்புச் செயலர் பி.எல்.
-
நான் பேசுவதை கேட்டுத்தான் அவைக்கு வர பிரதமர் பயந்தார்: ராகுல் காந்தி விமர்சனம்
09 Feb 2026புதுடெல்லி, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார் என்று ராகுல் காந்தி
-
தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு சென்ற ஜனநாயகன் திரைப்படம்..! விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்பு
09 Feb 2026சென்னை, ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.
-
பொது நிதிகள் குறித்து மக்களவைக்கு பிரதமர் அலுவலகம் முக்கிய உத்தரவு
09 Feb 2026புதுடெல்லி, பி.எம்.
-
என்.சி.பி. மூத்த தலைவர் சரத் பவார் மருத்துவமனையில் அனுமதி
09 Feb 2026புனே, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேற்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
20 வயது குறைந்திருக்கிறது: செங்கோட்டையன் பேச்சு
09 Feb 2026கோவை, எனக்கு இப்போது 20 வயது குறைந்திருக்கிறது. இளைஞராக ஓடுவதற்கு த.வெ.க. தலைவர் விஜய் என்னை தயார்படுத்தி இருக்கிறார் என்று கோவையில் நடந்த த.வெ.க.
-
கொடிக் கம்பங்களை அகற்றும் விவகாரம்: 13 மாவட்ட கலெக்டர்கள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
09 Feb 2026மதுரை, கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பாக 13 மாவட்ட கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
சரியான நேரத்தில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்போம் அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்
09 Feb 2026சென்னை, சரியான நேரம் வரும்போது தேர்தல் பேச்சுவார்த்தைக் குழுவை அமைப்போம், பேச்சுவார்த்தையை ஸ்டாலின் சுமுகமாக முடிப்பார் என்று இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.
-
தமிழகத்தில் திருநெல்வேலி, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் விரைவில் புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
09 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருநெல்வேலி, திருச்சி, தருமபுரி, வேலூர், ஈரோடு, திருவண்ணாமலையில் 6 புதிய அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.
-
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் பக்ரீத், ரம்ஜான் நாட்களில் மட்டும் தொழுகை நடத்துவதற்கு அனுமதி: ஐகோர்ட் தீர்ப்பை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்
09 Feb 2026புதுடெல்லி, திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்கா தொடர்பாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், ரம்ஜான், பக்ரீத் ஆகிய பண்டிகை நாட்களில் மட்டும் தர்காவில் தொழுகை நடத்த அன
-
பா.ம.க.-வின் தலைவர் அன்புமணிதான்: டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் உறுதிசெய்த தேர்தல் ஆணையம்
09 Feb 2026டெல்லி, பா.ம.க.வின் தலைவர் அன்புமணிதான் என்று டெல்லி நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், இந்த நடவடிக்கை ராமதாஸ் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


