முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டி: தமிழகம் முழுவதும் அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் தீபம் ஏற்றி சிறப்பு பிரார்த்தனை

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2016      தமிழகம்
Image Unavailable

சென்னை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டி தமிழகம் முழுவதும் மாநில அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் தீபவிளக்கேற்றி சிறப்பு பிரார்த்தனை நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

கூட்டுப்பிரார்த்தனை

முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வீடுதிரும்ப வேண்டி மாநில அம்மா பேரவையின் சார்பில் தமிழகம் முழுவதும் கோவில்களில் லட்சார்ச்சனை, சர்வ மதத்தினர் பங்கேற்ற மாபெரும் கூட்டுப்பிரார்த்தனை, தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பால்குடம் எடுத்து விஷேச பிரார்த்தனை, முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் சிறப்பு யாகத்துடன் சண்முகா அர்ச்சனை,  கோபூஜை, கோதானம் மற்றும் முதல்வர் ஜெயலலிதா பிறந்த மகம் நட்சத்திரத்தை முன்னிட்டு. நரசிம்மர், வராஹி அம்மன், பிரத்தியங்கிரா தேவி ஆகிய ஆலயங்களில் வேதவிற்பனர்கள், வேதபாராயணங்கள் முழங்க 108 ஹோம பொருட்களால் பல்வேறு  சிறப்பு ஹோமங்கள் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து  திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கீழ்திருப்பதியிலிருந்து மேல் திருப்பதி வரை பாதயாத்திரையாக சென்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

1 லட்சம் தீபவிளக்குகள்

இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் உள்ள முருகப்பெருமான் மற்றும் பல்வேறு ஆலயங்களில் நேற்று மாநில அம்மா பேரவை சார்பில் 1 லட்சம் கார்த்திகை தீப விளக்குகள் ஏற்றி விஷேச வழிபாடு மற்றும் விஷேச பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. அமைப்பு  ரீதியில் செயல்பட்டு வரும் 50 மாவட்டங்களில் இந்த சிறப்பு பிரார்த்தனைகள் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது.  வடசென்னை வடக்கு மாவட்டத்தில் ஆர்.கே.நகர் தொகுதியிலுள்ள அருள்மிகு முருகன் திருக்கோவில், வடசென்னை தெற்கு மாவட்டத்தில் எழும்பூரில் செல்வ விநாயகர் கோவில், தென்சென்னை வடக்கு மாவட்டத்தில் புதுப்பேட்டை பாலமுருகன்  கோவில், தென்சென்னை தெற்கு மாவட்டத்தில் வேளச்சேரி மருந்தீஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டத்தில் அனகாபுத்தூர் சுப்ரமணியசுவாமி கோவில், காஞ்சிபுரம் மத்திய மாவட்டத்தில் மறைமலை நகர் முருகன் கோவில், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்தில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவில், திருவள்ளுவர் மேற்கு மாவட்டத்தில் முருகன் கோவில், திருவள்ளுவர் கிழக்கு மாவட்டத்தில் தட்சிணாமூர்த்தி கோவில், வேலூர்; புறநகர் கிழக்கு மாவட்டத்தில்  செல்வவிநாயகர் கோவில், வேலூர் புறநகர் மேற்கு மாவட்டத்தில் ஆம்பூர் ஞானமலை முருகன் கோவில், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் ஆரணி முருகன் கோவில், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் குறிஞ்சியாபுரம் ஆறுமுக பெருமாள் கோவில், கடலூர்; கிழக்கு மாவட்டத்தில் நெய்வேலி முருகன்; கோவில், கடலூர்; மேற்கு மாவட்டத்தில் மேலகடம்பூர் அமிர்தகணேஷர் கோவில், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ராஜகுலம் சுப்பிரமணியக்கோவில்,

ஜெலகண்டேஸ்வரர் கோவில்

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் பெரியசேவலை முருகன் கோவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காசிநாயணபள்ளி முருகன் கோவில், தர்மபுரி மாவட்டத்தில் முருகன் கோவில், சேலம் மாநகர் மாவட்டத்தில் அம்மாபேட்டை சுப்பிரமணிய முருகன் கோவில், சேலம் புறநகர் மாவட்டத்தில் ஆத்தூர் கோட்டை முருகன் கோவில், நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு ஆறுமுகசுவாமி கோவில், ஈரோடு மாநகர் மாவட்டத்தில் காசிமலை முருகன் கோவில், ஈரோடு புறநகர் மாவட்டத்தில் தவனகிரி முருகன் கோவில், திருப்பூர் மாநகர் மாவட்டத்தில் அனுப்பூர்பாளையம் ஜெலகண்டேஸ்வரர் கோவில், திருப்பூர் புறநகர் மாவட்டத்தில் மடத்துக்குளம் முருகன் கோவில், கோவை மாநகர் மாவட்டத்தில் மருதமலை முருகன் கோவில், கோவை புறநகர் மாவட்டத்தில் பொள்ளாச்சி முருகன்; கோவில், நீலகிரி மாவட்டத்தில் காத்துகுழி பாலமுருகன்  கோவில், திருச்சி மாநகர் மாவட்டத்தில் பாலக்கரை முத்துமாரியம்மன் கோவில், திருச்சி புறநகர் மாவட்டத்தில் மணச்சநல்லூர் முருகன் கோவில், பெரம்பலூர் மாவட்டத்தில் வேப்பூர் முருகன் கோவில், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் அருள்மிகு குறைதீர்க்கும் குமரன் கோவில், கரூர் மாவட்டத்தில் பாலமலை பாலசுப்பிரமணிய கோவில், தஞ்சை வடக்குமாவட்டத்தில் முருகன் கோவில், தஞ்சை தெற்கு மாவட்டத்தில் ஒரத்தநாடு காசி விஸ்வநாதர் கோவில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சீர்காழி வைத்தீஸ்வரன் கோவில்,

குன்றக்குடி முருகன் கோவில்

திருவாரூர் மாவட்டத்தில் பரவக்கோட்டை தண்டாயுதபாணி கோவில், புதுக்கோட்டை மாவட்டத்தில் பாலதண்டாயுதபாணி கோவில், மதுரை மாநகர் மாவட்டத்தில் செல்லூர் பாலமுருகன் கோவில்,  மதுரை புறநகர் மாவட்டத்தில்  பழமுதிர்ச்சோலை முருகன் கோவில், தேனி மாவட்டத்தில் கம்பம் வேலப்பர் கோவில், திண்டுக்கல் மாவட்டத்தில் குண்ணம்பட்டி சுப்பிரமணியசுவாமி கோவில், விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் சுப்பிரமணியசுவாமி கோவில், சிவகங்கை மாவட்டத்தில் குன்றகுடி முருகன் கோவில், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் கொடுமலூர் முருகன் கோவில், திருநெல்வேலி மாநகர் மாவட்டத்தில் சாலை குமாரசுவாமி கோவில், திருநெல்வேலி புறநகர் மாவட்டத்தில் வென்னிமலை முருகன் கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி முருகன் கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகராஜர் கோவில், ஆகிய இடங்களில் உள்ள திருக்கோவில்களில் இந்த விஷேச பிரார்த்தனைகளும்,வழிபாடுகளும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை  மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அம்மா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் தலைமை கழக நிர்வாகிகள் அமைச்சர்கள், மாவட்ட கழக செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தீபவிளக்கு ஏற்றி முதல்வர் ஜெயலலிதா பூரண உடல் நலம்பெற வேண்டி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

பாதயாத்திரை

மதுரை புறநகர் மாவட்ட அம்மா பேரவை சார்பில் அழகர்கோவில் மலை மேல் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோவிலில் ஓம் என்ற எழுத்து வடிவில் 1008 கார்த்திகை தீபவிளக்குகள் ஏற்றபட்டு சிறப்பு வழிபாடுகளும், பிரார்த்தனைகளும் நடைபெற்றது. முன்னதாக  18ம் படி கருப்புச்சாமி கோவில் இருந்து மாநில அம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் பாதயாத்திரையாக புறப்பட்டு நான்கு கிலோமீட்டா் தூரம் நடந்து சென்று பழமுதிர்சோலையை அடைந்து அங்குள்ள முருகன் பெருமான் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டனர். முதல்வர் ஜெயலலிதா பெயரில் சிறப்பு அர்ச்சனையும், பூஜைகளும் நடத்தப்பட்டன.

1008 தீப விளக்குகள்

இதனை தொடர்ந்து ஓம் என்ற எழுத்து வடிவில் 1008 கார்த்திகை தீப விளக்குகளை மாநிலஅம்மா பேரவை செயலாளரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், இந்து அறநிலைத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் , மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா ஆகியோர் 1008  தீபம் ஏற்றி முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி சிறப்பு பூஜை செய்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.தமிழரசன் சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், பா.நீதிபதி, கே.மாணிக்கம், பெரியபுள்ளான் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர்  கலந்து கொண்டு மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்