முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் மாவட்டத்தில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்குவதற்காக நடத்தப்பட்ட செய்முறை தேர்வு

செவ்வாய்க்கிழமை, 20 டிசம்பர் 2016      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடைபெற்ற விலையில்லா தையல் இயந்திரங்கள் பெறுவதற்காக விண்ணப்பித்த பயனாளிகளில் தகுதியான நபர்களுக்கு நடைபெற்ற செய்முறை தேர்வினை மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், நேற்று (20.12.2016) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தையல் தொழில் தெரிந்தவர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்குவதற்காக தையல் தொழில் தெரிகிறதா என்று தையல் இயந்திரங்கள் மூலம் செய்முறை தேர்வு இன்று (20.12.2016) நடத்தப்பட்டு தெரிவு செய்யப்படும் அனைவருக்கும் விரைவில் தையல் இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளது. இந்த தையல் இயந்திரங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தையல் தொழில் தெரிந்தவர்கள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பித்தால் உடனடியாக தையல் இயந்திரங்கள் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.செந்தில் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்