கரூர் மாவட்டத்தில் மனிதனே மனிதக்கழிவுகளை அகற்றவது குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம்

புதன்கிழமை, 21 டிசம்பர் 2016      கரூர்
விழிப்புணர்வு

கரூர் : கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மனிதனே மனிதக்கழிவகளை அகற்றுவது குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட கலெக்டர் கு.கோவிந்தராஜ், தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: கோட்ட அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும். வீடுகள் தோறும் கட்டாய கழிப்பறைகள் கட்டித்தர வேண்டும். திறந்தவெளி கழிப்பிடங்களே இல்லாமல் செயல்பட வேண்டும். துப்பரவுப்பணிகளில், கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யும் பணியாளர்களுக்கு கையுறை, காலுரை மற்றும் தகுந்த வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். அவர்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வை ஏற்படுத்தி உரிய பாதுகாப்பு செய்து தர வேண்டும். மனிதனே மனிதக்கழிவுகளை அகற்றுவது குறித்து நகராட்சிகள் கண்காணித்திட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டுவது குறித்து காந்தி ஜெயந்தி, சுதந்திர தினம், குடியரச தினம் போன்ற விழாக்களில் கிராம சபா நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் தனியார்களை ஈடுபட விடாமல் தடுக்க வேண்டும். மீறினால் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரியவர்களால் மட்டுமே இப்பணிகள் செய்யப்பட வேண்டும். எடுத்துச் செல்லும் கழிவுகளை ஆற்றங்கரை, குளத்தங்கரை, இரயில்வே ட்ராக் போன்ற பொது இடங்களில் கொட்டாமல் கண்காணிக்க வேண்டும்.18-20 கி.மீ உட்பட்டுள்ள புலியூர், கிரு~;ணராயபுரம், உப்பிடமங்கலம் போன்ற பேரூராட்சிகளின் அனைத்து குப்பைகளையும் கரூர் நகராட்சிக்குட்பட்ட ஒரே இடத்தில் சேர்ப்பிக்கலாம். அரசு அங்கீகாரம் பெறாத வாகனங்களில் கழிவு நீர்களை பிளாஸ்டிக் செப்டிக் டேங்க் மூலம் எடுத்துச் செல்லக்கூடாது. அவ்வாறு எடுக்கப்படும் உரிமையாளர்கள் மற்றும் வாகனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்தில் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமல் செய்வதே நமது இலக்கு. இந்த இலக்கை அடைய அனைத்து அலுவலர்களும் ஒருமித்த கருத்துடன் பாடுபட்டால் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாற்ற முடியும் என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) இரா.பாண்டியன், திண்டுக்கல் உதவி இயக்குநர் எம்.ராஜேந்திரன்(பேரூராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள் அசோக்குமார்(கரூர்), எம்.குமார்(பொ)(குளித்தலை) மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: