சென்னையில் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த 8 பேரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது : சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஜார்ஜ் உத்தரவு

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      சென்னை

சென்னை பெருநகரில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும் பல்வேறு குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் ஜார்ஜ், உத்தரவின்பேரில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சென்னையில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றப் பின்னணி கொண்ட நபர்கள், திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகள் 8 பேரை கடந்த (16.12.2016) குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் .எஸ்.ஜார்ஜ், உத்தரவிட்டார்அதன்பேரில் 1. கார்த்திக் (எ) ஒட்டேரி கார்த்திக், வ/23, பெருங்களத்தூர் என்பவர் மீது 14 பீர்க்கன்கரணை காவல் நிலையத்திலும் 2. சஞ்சய், வ/34, புதுப்பேட்டை என்பவர் மீது எழும்பூர் காவல் நிலையத்திலும் 3.சரவணன் (எ) வெள்ளை சரவணன், வ/27, காவாங்கரை, புழல் என்பவர் மீது புழல் காவல் நிலையத்திலும் 4.உதயா (எ) உதயராஜ், வ/26, நெடுங்குன்றம் என்பவர் மீது பீர்கக்கன்கரணை காவல் நிலையத்திலும் 5. கனகராஜ், வ/42, காஞ்சிபுரம் மாவட்டம் என்பவர் மீது தாம்பரம் காவல் நிலையத்திலும் 6.ரகு, வ/24, த/பெ.நடராஜன், நீலாங்கரை என்பவர் மீது நீலாங்கரை காவல் நிலையத்திலும் 7. மௌவின், வ/35, எழில் நகர், சென்னை என்பவர் மீது கண்ணகி நகர் காவல் நிலையத்திலும் 8.வினோத்குமார் (எ) பிரேம்குமார் (எ) அப்பு வ/23, கொளத்தூர் என்பவர் மீது கொரட்டூர் காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்படி குற்றவாளிகள் 8 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டதால், சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் உத்தரவுப்படி கடந்த (16.12.2016) முதல் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: