முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரூராட்சி மற்றும் கற்பக வினாயகா பொறியியல் கல்லூரி இணைந்து பிளாஸ்டிக் விழிப்புணர்வு பேரணி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      காஞ்சிபுரம்

பொறியியல் கல்லூரியும் இணைந்து பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி உத்திரமேரூரில் நேற்று நடத்தியது. மேலும் வர்தா புயலால் உத்திரமேரூரில் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உறுவான குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கற்பக வினாயகா கல்லூரியில் உயிரியல் துறை தலைவர் கார்திகேயன், நாட்டு நல பணிதிட்ட அலுவலர்கள் சுந்தர பாண்டியன்,எட்சிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கல்லூரி செஞ்சிருல் சங்க நிர்வாகிகள் விக்னேஷ், ஞானசேகர் அனைவரையும் வரவேற்றனர். பேரணியில் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மரம் வளர்ப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியவாரும் துண்டுபிரசுரங்கள் வழங்கியும் பேரணியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணியானது பேரூராட்சி வளாகத்தில் துவங்கி பெரிய நாராசம்பேட்டைத் தெரு, காஞ்சிபுரம் சாலை, பஜார் வீதி, சன்னதித் தெரு, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று தாலுக்கா அலுவலக அருகே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முழுவதிலும் பேரூராட்சி ஊழியர்களுடன் இணைந்து கல்லூரி மாணவ-மாணவியர்கள் வர்தா புயலால் ஏற்பட்ட குப்பைகளை துய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியை தொடர்ந்து பேரூராட்சி சார்பில் வைக்கப்பட்டுயுள்ள திடகழிவு மேலாண்மை பணிமனையில் பிளாஸ்டிக் கழிவிலிருந்து உருவாக்கிய கலைப்பொருட்களை பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி மாணவ மாணவியர்கள் பேராசிரியர்கள் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்