திருவண்ணாமலை அருகே 27 அடி உயரமுள்ள ஐயப்பனுக்கு கும்பாபிஷேகம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் அருகே சு.உண்ணாமலை பாளையத்தில் அமைந்துள்ள 27 அடி உயரமுள்ள் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. க. உண்ணாமலை பாளையத்தில் உள்ள சிறிய மலைக்குன்றில் பூமிக்கடியில் சுவாமி சிலைகள் உள்ளதாக ஹரிபுத்ர சுவாமிக்கு கனவில் தோன்ற சுவாமிகள் உடனடியாக கனவில் தோன்றிய இடத்திற்கு வந்து தியானத்தில் அமர்ந்த போது அப்பகுதி மக்கள் இதனை கேள்விபட்டு அக்குன்றில் குவிய தொடங்கினர். சுவாமிகள் அம்மக்களிடம் சில இடங்களை குறிப்பிட்டு தோண்ட கூற அவர்களும் தோண்ட அழகிய ஐயப்பன் சிலை கிடைத்தது. இதே போல் இனனும் சில சுவாமி சிலைகள் கிடைக்க அப்பகுதியில் அழகிய ஆதி ஐயப்பன் கோயில் 1990ம் ஆண்டு எழும்பியது. கேரள சபரிமலை போல் விரதமிருந்து இருமுடி சுமந்து இந்த ஆதி ஐயப்ப கோயிலுக்கு பக்தர்கள் வந்து ஐயப்னுக்கு நெய்யபிஷேகம் செய்து விரதத்தை முடிக்கின்றனர். வருடா வருடம் விருதம் இருந்து ஜனவரி முதல் நாள் ஐயப்ப பக்தர்கள் ஜோதி தரிசனம் செய்கின்றனர். இவ் வருடம் வருகிற ஜனவரி முதல் நாள் ஐயப்ப ஜோதி தரிசனம் மற்றும் தமிழகத்திலேயே முதன் முதலாக இக் கோயிலில் அமைந்துள்ள 27 அடி உயரமுள்ள ஆதி ஐயப்பன் திருஉருவ சிலைக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இக் கோயிலில் ஒவ்வொறு ஆங்கில மாதம் முதல் தேதி நடைதிறப்பு, யாகசாலைபூஜை மற்றும் பால் குடம் எடுத்தல், ஐயப்ப தரிசனம்,அன்னதானம்,ஆண்டு தோறும் ஜனவரி முதல் தேதி நடை திறப்பு, நெய்யபிஷேகம், ஜோதி தரிசனம் அன்னதானம், ஆடி மாதம் 3ந் தேதி மகான் ஹரிபுத்ர சுவாமிகளின் ஜெயந்தி விழா, சிறப்பு ஐயப்ப தரிசனம்,அன்னதானம், மற்றும் கோயிலில் அமைந்துள்ள சயம்பு பற்று அம்மன், வினாயகர்,ஆதி நாயகி அம்மன், சிவன், பதினெட்டு சித்தர்கள், அஷ்ட லஷ்மிகள்,முருகர்,ஆஞ்சநேயர் ஆகிய சந்நதிகளில் சிறப்பு அபிஷேகம்,பூஜைகள்,அன்னதானம் ஆகியவைகள் நடைபெறுகின்றனது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: