குன்னூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2016      நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் குறுகிய கால பயிற்சி அளிக்க தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடர்பான நிலையத்தின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு_

                                        2023

தமிழ்நாடு அரசு தொலை நோக்குப்பார்வை 2023 ஆனது தமிழகத்தில் உள்ள பள்ளிக்கல்வி பெறாதவர்கள், பள்ளிக்கல்வி தொடர முடியமாமல் இடைநின்றவர்கள், பத்தாம் வகுப்பு வரை பயின்றவர்கள், வேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் மற்றும் தற்பொழுது வேலையில் இருக்கும் இளைஞர்கள் மொத்தம் 20 மில்லியன் நபர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம் திறன் மேம்பாட்டுப்பயிற்சி அளிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

                                  விண்ணப்பம்

இது தொடர்பாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் மத்திய அரசின் எஸ்டிஐ எம்இஎஸ் அல்லது எஸ்எஸ்சி என்எஸ்டிசி திட்ட தொழிற்பிரிவுகளின் அடிப்படையில் குறுகிய கால பயிற்சி அளிப்பதற்கு நீலகிரி மாவட்டத்தில் தகுதியுள்ள நிறுவனங்களிடமிருந்து விருப்பம் தெரிவித்து விருப்பம் தெரிவித்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இணைய தளத்தில் கீசிசிஙீஙூ//சிடூசுடீங்ஹடுசுஹஹடுஙீஙீசீ.கிச்சு.டுடூ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். குறுகிய கால பயிற்சி தொடர்பான வழிமுறைகள் பற்றிய முழுவிவரங்களை சூசூசூ.ஙூக்ஷடு.கிச்சு.டுடூ என்ற இணைய தள முகவரியில் அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், சிம்ஸ் பூங்கா அருகில், குன்னூர், நீலகிரி மாவட்டம் தொலைபேசி 0423 2231759 என்ற முகவரியை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: