பாலிடெக்னிக் மாணவர்கள் ரத்ததானம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      வேலூர்
Dt 24AKM POTO 02

 

அரக்கோணம்:நிறுவனர் தின விழாவை ஒட்டி ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் மாணவர்கள் ரத்தம் தானம் செய்தனர். இது குறித்து விவரம் வருமாறு. வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரத்தின் எல்லையில் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ரத்ததானம் முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழுமம், வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி மருத்துமனை ஆராய்ச்சி நிலையத்துடன்; இணைந்து அரக்கோணம் இந்திய கடற்படை அரிமா சங்கம் இம்முகாமிற்கு ஏற்பாடுகளை செய்தது.இந்திய கடற்படை அரிமா சங்க தலைவர் தாமோதரன் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ்குமார் வரவேற்றார். கல்லூரி செயலாளர் டி.ஆர்.எஸ்.ரவிக்குமார், கல்லூரி இயக்குனர் சாம்பமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஜி.கே.பாபுஜி, ஸ்ரீபுரம் நாராயணி மருத்துமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்ரீகிருஷ்ணா கல்வி குழும தலைவர் டாக்டர். டிஆர்.சுப்பிரமணியம், முன்னாள் மாவட்ட ஆளுநர் ஆர்.அரிதாஸ் ஆகிய இருவர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.2ம் நிலை ஆளுநர் நந்தகோபால், குணசேகர், அருண்குமார், வெங்கடேசன், ஜெகதீசன், பிடி.ராஜேந்திரன், கமல், ரோஸ்குமார், ஆகியோர் முகாமில் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள். பூர்ணிமா, லட்சுமி, ஜெயந்தி, செல்வகுமாரி, ஆகியோருடன் பாலிடெக்னிக் கல்லூரிமுதல்வர் செந்தில்குமார், மெட்ரிக் பள்ளி முதல்வர் தாமோதரன், மக்கட் தொடர்பு அலுவலர்சீனிவாசன். ஆகியோருடன். அலுவலக உதவியாளர்கள் கோபிநாத், சுரேஷ், வீரமணி, உள்ளிட்டவர்களுடன் என்சிசி ஆசிரியர் ராஜசேகர், மாணவர்களும் கலந்து கொண்டு முகாம் பணிகளில் ஈடுபட்டனர் நூற்றுகணக்கான பாலிடெக்னிக் மாணவர்கள் ஆர்வத்துடன் ரத்த தானம் செய்து மகிழ்ந்தனர். இறுதியில் சங்க பொருளாளர் மோகன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: