நீர்நாய் கடித்து 5 மாணவ, மாணவிகள் காயம்

வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2016      ஈரோடு

சத்தியமங்கலத்தை அடுத்த அரசூர் ஆற்றங்கரையில் நீர்நாய் கடித்ததில் ஒரு மாணவர் உள்பட 5 மாணவிகள் காயமடைந்தனர்.  சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிரியா (14), நந்தினி(14), கலைவாணி (14), காவியா (14) ஆகியோர் 9-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.  அரசூரைச் சேர்ந்த நந்தினியின் இளைய சகோதரர் லோகேஷ் (4). இவர், அதே ஊரில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார். பிரியா, கலைவாணி, காவியா ஆகியோர் அரசூரில் உள்ள நந்தினியின் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றுள்ளனர்.  பள்ளித் தோழிகளுடன் நந்தினி அவரது சகோதரர் லோகேஷ் ஆகியோர் அரசூர் பவானி ஆற்றுக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் இருந்த நீர்நாய் கடித்ததில் 5 பேரும் காயமடைந்தனர். ஆற்றங்கரையில் இருந்த பொதுமக்கள் 5 பேரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: