இருதயமும், நுரையீரலும் இளமையாக இருக்க உதவும் மூச்சுப்பயிற்சி

ஞாயிற்றுக்கிழமை, 25 டிசம்பர் 2016      வாழ்வியல் பூமி
Irudayam 2016 12 25

ஒருவனுக்கு வயது ஏற ஏறத்தான் உடல் ஆரோக்கியத்தை பற்றிய சிந்தனை வருகின்றது. அப்போது அவன் பல வேலைகள் செய்ய நினைத்தாலும் அவன் உடல் அவனுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. அப்போது தான் தன் உடலை நன்றாக பேணி பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கின்றது ஏன் கட்டாயமும் வருகின்றது . அதற்காக சிறந்த வழிகளை தேடுகின்றான். பணம் கொடுத்து பல பயிற்சி செய்கிறான். விளம்பத்தின் கவர்ச்சியை நம்பி ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து பல உடல் பயிற்சி சாதனங்களை வாங்கி பயிற்சியை மேற்கொள்கிறான். அவ்வளவும் அதிகபட்ஷம் ஓரிரு மாதங்கள் வரை தான். அதற்குப் பிறகு அனைத்தும் வீட்டின் ஒரு மூலையில் தூங்கி கிடக்கும். ஏன் ? உடல் பயிற்சி செய்யவில்லை என்று கேட்டால் "நேரமில்லை அல்லது உடல் ஒத்துழைக்கவில்லை " என்ற பதில் தான் வரும்.

வயதான பிறகு உடலை பல கோணங்களில் நீட்டி, மடக்கி, வளைத்து , நிமிர்ந்து , உட்கார்ந்து செய்யும் யோகாசனங்கள் இளம் வயதுகாரங்க கூட செய்வதுற்கு கஷ்டமாய் இருக்கும்.அப்படி இருக்கும் போது வயதானவர்கள் எப்படி செய்ய முடியும். அதனாலே தான் பெரியவங்க '5 ல் வளையாதது 50 ல் வளையமா ? ,  என்றும் 'தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் ' என்றும் சொல்லியிருக்கிறார்கள். இது உடற்பயிற்சிக்கு மட்டுமல்ல எல்லாவற்றிற்கும் பொருந்தும். அதாவது சிறிய வயதிலிருந்து கற்றுக் கொடுத்திருந்தால் வயதான பிறகும் உடல் ஒத்துழைப்பு தந்திருக்கும்.அனால் 'சிறிய வயதில் கற்று கொடுப்பதற்கு நேரம் இல்லை தகுந்த ஆட்களும் கிடைக்கவில்லை

ஒருவனுக்கு உடல் ஆரோக்கியம் தான் அடித்தளம். அதைகொண்டு தான் உடல் பலம் பெறமுடியும். அதற்கு செலவில்லாமல் எளிய வழியில் பக்க விளைவு இல்லாத  உடலை 'சிலிம்'மாக வைக்கும் வழியைத்தான் அனைவரும் விரும்புவர்.பணம் கொடுத்துவிட்டலோ, பணம் செலவழித்து விட்டாலோ உடல் ஆரோக்கியம் வந்து விடாது. உங்கள் உடலை நீங்கள் தான் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.

உடலின் பலம் 'தம்' மில் தான் இருக்கின்றது. 'தம்' என்றால் புகை பிடிப்பது என்ற அர்த்தம் இல்லை.மூச்சை (காற்றை) பிடித்து வைப்பதில் தான் இருக்கின்றது. எவ்வளவுகெவ்வளவு அதிக நேரம் மூச்சை அடக்கி வைத்திருகின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு உடலில் தெம்பு இருக்கின்றது என்று அர்த்தம். குறைந்தது 5 அல்லது 10 வினாடிகள் வரை மூச்சை அடக்கி வைத்திருந்தால் உடல் பலம் நல்லநிலையில் இருக்கின்றது என்று அர்த்தம்.சிலர் குறிப்பாக நீச்சல் தெரிந்தவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் 60 வினாடிக்கும் மேலாக மூச்சை அடக்கி வைத்திருப்பார்கள். டயரில் காற்று இருக்கும் வண்டிகள் இலேசாகவும் அதிக வேகத்தில் ஓடுவதற்கு  உதவி செய்வது போல உடலில் மூச்சு அடக்கப்படும்போது உடல் இலேசாகவும் , அதிக அளவு சக்தியையும்  கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் வேகமாக ஓடுவதற்கு மூச்சை அடக்கிக்கொண்டு ஓடுவதை

நீங்கள் கவனித்திருப்பீர்கள்.அதற்கு மூச்சு பயிற்சி மிகவும் அவசியம்.

இந்த பயிற்சியில் மூச்சை வயிறை  சுருக்கி உள்ளே இழுப்பதால் 'தொப்பை' என்கிற பேச்சுக்கு இடம் ஏதுமில்லை. அப்படி 'தொப்பை' உள்ளவர்கள் இந்த பயிற்சி தீவிரமாக செய்வதன் மூலம் 'தொப்பை' நன்றாக குறைத்து 'சிலிம்' மாக மாறுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

காற்றை வேக வேகமாக மூக்கின் வழியே சுவாசிப்பதால் காற்று உடலின் உள்ள அனைத்து பாகங்களுக்கும் போய்  சேருவதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்கிறது.அதனால் உடல் விரைவில் சோர்வு அடைகிறது.

உதாரணமாக சற்று பருமனானவர்கள் சிறிதளவு வேகமாக நடந்தாலே இளைக்க ஆரம்பித்து சோர்வடைந்து விடுகின்றனர்.ஏனென்றால் அவர்கள் இருதயமும் , நுரையீரலும் வேக வேக வேலை செய்து கலைத்து விடுகின்றது.

இதை போக்கத் தான் மூச்சுப்பயிற்சி மிகவும் அவசியமாகிறது . இந்த பயிற்சி உடல் புத்துணர்ச்சி தருகிறது.உடலை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. மூச்சை 5 வினாடிகள் வரை அடக்கி வைத்திருப்பதால் சுவாசிக்கும் காற்று உடலின் மூளைக்கும் மற்ற பகுதிக்கும் ஒரேமாதிரியாக நிதானமாக    எடுத்துச்சென்று புத்துணர்ச்சியை தருகிறது.

பல வழிகளில் புத்துணர்ச்சியை அடையலாம். நடை பயிற்சி, யோகா, தியானம், ஒலி ஒளி யோகா, உடற்பயிற்ச்சி மற்றும் மூச்சு பயிற்சி. இவற்றில் மிக  மிக எளிதானதும் , எந்த இடத்திலும், எந்த வயதினருக்கும் குறைந்த நேரத்தில் சிறந்த பலனும், இலகுவானதும் இருப்பது இந்த மூச்சு பயிற்சி தான்.

பயிற்சியின் போது  பின்பற்ற வேண்டியவை :ஒவ்வொரு முறை வயிற்றை சுருக்கி மூச்சு இழுக்கும்போது குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை நீளமாக மூச்சை மெல்ல மெல்ல இழுக்க வேண்டும்.பிறகு குறைந்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை அடக்கி வைத்திருக்க வேண்டும்.அதேபோல் குறைந்த்தது 1,2,3,4,5 எண்ணும் வரை மூச்சை நீண்டு மெல்ல மெல்ல விடவேண்டும்.

இனி மூச்சு பயிற்சிக்கு தயாராயிருங்கள்.

முதல் பயிற்சி : இரு துவாரங்கள் வழியாக

1.  ஓரிடத்தில் சௌகரியமாக அமருங்கள்.

2. உடலை இலேசாக்கி கண்களை மெல்ல மெல்ல மூடுங்கள். பயிற்சி முடியும் வரை கண்களை மூடிக்கொண்டிருக்க வேண்டும்.கட்டை விரலையும் 

3.   இப்போது சாதாரணமாக 1,2,3,4,5 எண்ணிக்கொண்டு மூக்கின் இரு துவாரங்கள் வழியாக வயிற்றை சுருக்கி மூச்சை மெல்ல மெல்ல இழுங்கள்.

4. 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை அடக்கி வைத்திருங்கள் .    

5. பிறகு 1,2,3,4,5 எண்ணும்வரை மூச்சை மெல்ல மெல்ல வெளியே விடுங்கள்.

இரண்டாவது பயிற்சி : இடது துவாரம் வழியாக மட்டும்

1. கட்டை விரலால் (படத்தில் காட்டியபடி) வலது துவாரத்தை அடைத்துக்கொண்டு இடது துவாரம் மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

மூன்றாவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மட்டும்     

1. சுண்டு விரலால்இடது  துவாரத்தை அடைத்துக்கொண்டு வலது துவாரம்  வழியாக மேற்ப்படி முறையே 3,4 மற்றும் 5 ஆவது செய்முறையை பின்பற்ற வேண்டும்.

நான்காவது பயிற்சி :வலது துவாரம் வழியாக மூச்சை இழுத்து இடது துவாரம் வழியாக 1.    கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து வலது துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும் வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல லெல்ல வெளியில் விடவேண்டும்.   

ஐந்தாவது பயிற்சி :இடது  துவாரம் வழியாக மூச்சை இழுத்து வலது  துவாரம் வழியாக 1.   கட்டை விரல் மற்றும் சுண்டு விரலை உபயோகித்து இடது  துவாரம் வழியாக மூச்சை 1,2,3,4,5 எண்ணும்  வரை வரை மெல்ல மெல்ல இழுத்து, 1,2,3,4,5,வரை  மூச்சை அடக்கி 1,2,3,4,5 வரை இடது துவாரம் வழியாக மெல்ல மெல்ல வெளியில் விடவேண்டும்.இந்த 5 பயிற்ச்சியும் முடிந்த பிறகு சாதாரணமாக மூச்சை மெல்ல மெல்ல இழுத்து , அடக்கி பிறகு வெளியில் விடவேண்டும்.இப்போது தான் கண்களை மெல்ல மெல்ல திறக்க வேண்டும்.இப்போது உங்கள் உடலில் புத்துணர்ச்சி பரவுவதை உணர்வீர்கள்.தினமும்  இந்த பயிற்சியினை செய்யும் போது  புதுதெம்பை உணர்வீர்கள். நாள்தோறும் இப்பயிற்சியினை தவறாது செய்து இருதயமும், நுரையீரலும் இளமையாக வைத்துகொள்ளுங்கள்

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்: