முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்

சனிக்கிழமை, 10 மே 2025      தமிழகம்
ThambiDurai-2025-04-17

Source: provided

கிருஷ்ணகிரி : சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும், என பர்கூரில் அ.தி.மு.க. எம்.பி தம்பிதுரை கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான மு.தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது: மாநில பட்டியலில் இருந்த கல்வியை, இந்திராகாந்தி ஆட்சியில் தான் மத்திய அரசு பொதுப்பட்டியலுக்கு மாற்றியது. அதனை, இன்றுவரை மாநில பட்டியலுக்கு கொண்டு வர முடியவில்லை. இதன் காரணமாக தான் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வருகிறது. 

அ.தி.மு.க. கொள்கை ரீதியாக நீட் தேர்வு வேண்டாம் என்றாலும், மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மெட்ரிகுலேஷன் மற்றும் அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைக்கிறோம். இதனை தவிர்த்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்குவதால், அது மத்திய அரசின் கல்விக் கொள்கையின் கீழ் தான் வரும். கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் 252 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு அனுமதி வழங்கிவிட்டு, மாநில கல்வி மத்திய அரசுக்கு சென்று விட்டது என குறை சொல்வது சரியாக இருக்காது.

சி.பி.எஸ்.இ. கல்வியை விட மெட்ரிகுலேஷன் கல்வி தரத்தை மாநில அரசு உயர்த்த வேண்டும். சமச்சீர் கல்வி என சொல்லி தரத்தை குறைத்து விட்டதால், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட பல பள்ளிகள் வருகிறது. அங்கு மாணவர்கள் செல்கிறார்கள் கட்டணமும், அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் ஏழை மாணவர்கள் படிக்க முடியவில்லை. அதனால் தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். மாநில அரசு தரமான கல்வியை மாணவர்களுக்கு தர வேண்டுமே தவிர, மத்திய அரசு மீது குற்றம் சுமத்தக்கூடாது. 

சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அமைக்க தடையில்லா சான்றிதழ் மாநில அரசு வழங்கிவிட்டு பிறகு மத்திய அரசு கல்விக் கொள்கையை எப்படி தடுக்கமுடியும். சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் மத்திய அரசின் பாடப் பிரிவுகள் தான் நடத்தப்படும். இருமொழி கல்வி முறை இருக்கும் போது எதற்காக சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசு அனுமதி வழங்குகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு இணையாக மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பாடத்திட்டத்தை தரமாக அரசு உயர்த்தினால் தமிழக மாணவர்கள் எளிதாக நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியும், என்று அவர் கூறினார். இந்நிகழ்வின் போது, முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து