முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா?

சனிக்கிழமை, 10 மே 2025      விளையாட்டு
Punjab 2025-04-16

Source: provided

தர்மசாலா : பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி ஐ.பி.எல். லீக் போட்டி மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

போர்ப் பதற்றம்... 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. இதன் விளைவாக, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் அதிகரித்து, இரு தரப்பிலிருந்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் ஐ.பி.எல். போட்டிகள் ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.

பாதியில் நிறுத்தம்...

ஹிமாசலில் மே.8ஆம் தேதி நடைபெற்ற பஞ்சாப் -டில்லி ஐ.பி.எல். போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. பஞ்சாப் அணி 10.1 ஓவர்களில் 122/1 ரன்கள் குவித்திருந்தது. இந்தப் போட்டியில் பிரியான்ஷ் ஆர்யா 70 ரன்களுக்கு ஆட்டமிழக்க பிரப்சிம்ரன் சிங் 50 ரன்களுடனும் ஷ்ரேயாஸ் ஐயர் பூஜ்ஜியத்துடனும் களத்தில் இருந்தார்கள். இந்தப் போட்டி கைவிடப்பட்டாலும் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகளை ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கவில்லை. அதனால், இந்தப் போட்டி மீண்டும் தொடங்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

வாக்குவாதம்...

இந்நிலையில், இந்தப் போட்டி 10.1ஆவது ஓவரில் இருந்து மீண்டும் தொடங்குமா அல்லது புதியதாக தொடங்குமா எனக் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சில ஊடகங்களில் 10.1ஆவது ஓவரில் இருந்து மீண்டும் தொடங்குமெனக் கூறப்பட்டு வருகிறது. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் வெளியாகாத நிலையில் கிரிக்கெட் ரசிகர்களிடையே வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஒருவேளை இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளியை வழங்கினால் டில்லிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து