எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி பெங்களூரூவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி நடக்க இருந்தது.
இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுவதால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப் பட்டுள்ளது.
__________________________________________________________________________________________________________________
ரிஷப் பண்ட் தடுமாறுவது ஏன்? சஞ்சய் பங்கர் விளக்கம்
நடப்பு ஐ.பி.எல். தொடருக்கு முன்னதாக நடைபெற்ற மெகா ஏலத்தில் ரூ.27 கோடி என்ற ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால் அந்த வாய்ப்பில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் சொதப்பிய பண்ட் 11 போட்டிகளில் விளையாடி வெறும் 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதன் காரணமாக லக்னோ அணி புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் தடுமாறி வருகிறது.
இந்நிலையில் ரிஷப் பண்ட் தடுமாற்றம் குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறுகையில், "ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் சிறப்பான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த ஐ.பி.எல். சீசனில் பெரும்பாலான போட்டிகளில் அவர் ஸ்டப்புகளுக்கு பின்னே அடிக்க முயற்சித்து அவுட்டானதை கவனித்தேன். ரிஷப் பண்ட் விளையாடிய சிறந்த போட்டிகளில் எல்லாம் அவர் கவர் திசையில் அல்லது இறங்கி சென்று நேராக அல்லது மிட் விக்கெட் அல்லது ஸ்கொயர் திசைகளில் அடித்திருப்பார். ஆனால் இப்போது அவர் ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அதிகம் முயற்சிக்கிறார். அந்த வகையில் தன்னுடைய சிறந்த ஆட்டத்தை மறந்துள்ள பண்ட் குழப்பத்தில் சிக்கியுள்ளார் என்று நான் கருதுகிறேன்" என கூறினார்.
__________________________________________________________________________________________________________________
ரசிகர்களுக்கு சி.எஸ்.கே. வீரர் பிரேவிஸ் நன்றி
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை ஒருவாரம் நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. இந்திய வீரர்களில் பலர் உடனடியாக தங்களது வீடுகளுக்கு திரும்பியதாகவும், வெளிநாட்டு வீரர்களும் விமானம் மூலம் தங்களது நாட்டுக்கு புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், இந்த நிலையில் ரசிகர்களுக்கு சென்னை வீரர் டெவால்ட் பிரேவிஸ் நன்றி தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் கூறியதாவது, சென்னை அணிக்கும், பயிற்சியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி. சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய அனுபவம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தியா முழுவதும் இருந்து எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. இங்கு செலவழித்த நாட்கள் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானவை. சென்னையில் இருந்த நாட்கள் என் வாழ்நாள் முழுமைக்குமானவை. மீண்டும் விரைவில் உங்களை சந்திக்கிறேன். என தெரிவித்துள்ளார் .
__________________________________________________________________________________________________________________
இத்தாலி ஓபன் டென்னிஸ்: சபலென்கா முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார். இதில் சிறப்பாக ஆடிய ரிபாகினா 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் பெலாரசின் அரினா சபலென்கா 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ரஷியாவின் பொடபோவாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்துக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட்டில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்துக்கு ரூ. 11,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்திய போது தமிழகமே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது: அமைச்சர்
17 Feb 2026சென்னை, மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டிற்கே முன்னோடி திட்டம் என்றும் ரூ.5,000 மகளிரின் வங்கிக்கணக்கில் செலுத்திய போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோனது என்று
-
'வித் லவ்' பட தயாரிப்பாளர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
17 Feb 2026சென்னை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை “வித் லவ்” திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் செவ்வாய்க்கிழமை (பிப். 17) நேரில் சந்தித்து உரையாடியுள்ளனர்.
-
3 ஈரானிய எண்ணெய் கப்பல்களை பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை..!
17 Feb 2026புதுடெல்லி, அமெரிக்க அரசால் தடை செய்யப்பட்ட ஈரானின் மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை பறிமுதல் செய்துள்ளது.
-
இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவுமே இல்லை: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
17 Feb 2026சென்னை, தமிழக அரசிந் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பில் உருப்படியாக எதுவும் இல்லை என்றும் அத்திப்பழம் போன்று சொத்தையாக உள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள்: இடைக்கால பட்ஜெட்டில் அறிவிப்பு
17 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருவதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பிரான்ஸ் அதிபர் வரவேற்ற பிரதமர் மோடி
17 Feb 2026மும்பை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மூன்று நாள் பயணமாக நேற்று முன்தினம் இந்தியா வந்தடைந்தார்.
-
புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் பேர் பயன்: இடைக்கால பட்ஜெட்டில் தகவல்
17 Feb 2026சென்னை, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
தமிழக வேளாண் பட்ஜெட் 2026: முக்கிய அம்சங்கள் என்னென்ன?
17 Feb 2026சென்னை, தமிழக அரசின் 2026-27 இடைக்கால வேளாண் பட்ஜெட்டை நேற்று (பிப்.17) சட்டப்பேரவையில் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
-
இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Feb 2026சென்னை, தமிழக இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
விடியல் பேருந்துகளில் பெண்கள் 881 கோடி முறை பயணம் தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு அரசின் விடியல் பேருந்து திட்டத்தில் 881 கோடி முறை மகளிர் பயணம் செய்துள்ளதாகவும், தமிழகத்தில் சராசரியாக பெண்கள் மாதம் 888 ரூபாய் சேமித்துள்ளனர் என்றும்
-
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 2.55 கோடி பேர் பயன்: சட்டசபையில் அமைச்சர் தகவல்
17 Feb 2026சென்னை, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயன் பெற்றுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
21 மாவட்டங்களில் முகாம்கள் மூலம் 1,929 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: அமைச்சர்
17 Feb 2026சென்னை, தமிழகத்தில் இதுவரை 21 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
வரும் 2030 - ம் ஆண்டுக்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்
17 Feb 2026சென்னை, வரும் 2030-க்குள் 8 லட்சம் கலைஞர் கனவு இல்லம் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
-
எப்ஸ்டீனுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விளக்கம்
17 Feb 2026நியூயார்க், ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என அனைவரும் பாராட்டு: இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
17 Feb 2026சென்னை, மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி வளர்ச்சியில் சாதனை படைத்துள்ளோம் என்றும், தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான
-
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை.,யில் மாணவர் சேர்க்கை 97 சதவீதமாக உயர்வு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்
17 Feb 2026சென்னை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 2021-ம் ஆண்டில் 74 சதவீதமாக இருந்த இளங்கலை மொத்த மாணவர் சேர்க்கை 2025-ஆம் ஆண்டில் 97 சதவீதமாக உயர்ந்துள்ளதாக வேளாண்மை மற
-
திருச்சி, மதுரை, ஒசூரில் புதிய டைடல் பூங்காக்கள் அமைப்பு: தமிழக அரசின் திட்டங்களை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்
17 Feb 2026சென்னை, தமிழகத்தின் பல்வேறு திட்டங்களை பிற மாநிலங்கள் பின்பற்றுகின்றன என்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய நாள் எப்படி?
17 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
17 Feb 2026- திருவைகாவூர், திருக்கோகர்ணம், வேதாரண்யம் கோவில்களில் சிவபெருமான் பவனி.
- நத்தம் மாரியம்மன் புறப்பாடு.
- உலக்குடி அரியவன் சுவாமி வழிபாடு.



