முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் மீட்கப்பட்ட இடம் மீட்பு

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      கோவை

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள  மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் 23.12.2016 மற்றும் 24.12.2016 ஆகிய இரு தினங்களில் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்  தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி இடம்

மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர்  தெரிவிக்கையில், “கோயம்புத்தூர் மாநகராட்சியிலுள்ள 5 மண்டலங்களின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தியம் ஆகிய வார்டு பகுதிகளிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீட்டு இடங்களை உதவி நகரமைப்பு அலுவலர்கள் மூலம் இடங்களை கண்டறிந்து, விரைவில் மீட்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 23.12.2016 மற்றும் 24.12.2016 ஆகிய 2 தினங்களில் மட்டும் மாநகராட்சியில்              5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டடு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், வார்டு-32, விலாங்குறிச்சி, உதயாநகர் பகுதியில் உள்ள பொது  ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 85 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வார்டு-16, வடவள்ளி, வடவள்ளி (பேருந்து நிறுத்தம்) இடத்தில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான 20 சென்ட் அளவிலான இடங்களும், வடக்கு மண்டலம், வார்டு-28, ஜி.கே.எஸ் நகர் மற்றும் வார்டு-41, கணபதி, காந்திமா நகர் ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட கடைகள் அகற்றப்பட்டும், வார்டு-28, சரவணம்பட்டி, மீனாட்சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான 50 சென்ட் அளவிலான இடங்களும், தெற்கு மண்டலம், வார்டு-90, சுண்டக்காமுத்தூர், சரஸ்வதி நகர் கம்யூனிட்டி ஹால் அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.60 கோடி மதிப்பிலான 70 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், வார்டு-53, சித்தாபுதூர், பரமேஸ்வரன் பிள்ளை லே-அவுட் அருகில் சாலை ஓரங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் சிக்கன் கடை மற்றும் கழிப்பிடத்தை அகற்றப்பட்டு மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகமொத்தம், மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.24.60 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் அளவிலான மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டடு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்ட்டுள்ளது.

மேலும் இதுபோன்ற ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையாளர் மற்றம் தனி அலுவலர் டாக்டர்.க.விஜயகார்த்திகேயன்   தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago