தி.மலையில் தமிழ்நாடு மின்வாரிய அண்ணாபொதுத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

திங்கட்கிழமை, 26 டிசம்பர் 2016      திருவண்ணாமலை

திருவண்ணாமலை:தமிழ்நாடு மின்வாரிய அண்ணா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், திருவண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள கிருஷ்ண மகாலில் ஞாயிறு அன்று நடைபெற்றது. மரிய அந்தோணி ராஜ் தலைமை தாங்கினார், மாநில துணைத்தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் முத்தையன், மாநில நிர்வாகிகள் சென்னையை சேர்ந்த ஜெயச்சந்திரன், ராஜா, திருச்சி வரதராஜன், மணிகண்டன், சிவா, சேலம் செந்தில், ராஜா, ரகுபதி, திருவள்ளூர் ஹரி, ரவி, வரதன் மற்றும் பலர் இதில் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர், மின்வாரியத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களின் பட்டியலை மின்வாரியத்திடமும், தொழிலாளர் நல ஆணையத்திடமும் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே, கடந்த பிப் 8 ம் தேதி ஒப்பந்த தொழிலாளர்கள் நிரந்தரப்படுத்தப்படுவர்கள் என்று மறைந்த முதல்வர் அம்மா அறிவித்ததின் அடிப்படையில், அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், மேலும், சங்கத்தை தவறாக பயன்படுத்தியதால் நீக்கம் செய்யப்பட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டது.

இதில் திருவண்ணாமலை மாவட்ட புதிய நிர்வாகிகளாக, கே.சாமுவேல் தலைவராகவும், எம்.பாஸ்கர் செயலாளராகவும், ப.சரவணன் பொருளாளராகவும், துணைத்தலைவர்களாக ஏ.சசிகுமார், இ.பாபு, துணை செயலாளர்களாக டி.குமரன், ராம்கி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் என்.நாராயணன் நன்றி கூறினார்.

 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: