ஞான வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      திருவள்ளூர்
Tvallur photo11

ஞான வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிறப்பு நாட்டு நலப்பணி திட்ட துவக்க விழா திருப்பாச்சூர் ஊராட்சியில் உள்ள டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் சி.பி.எஸ்.சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழாவிற்கு பள்ளி தாளாலர் ஏ.லாலு தலைமை தாங்கினார்.பள்ளி செயலாளர் டி.குப்புசாமி மற்றும் பொருளாளர் பி.வி.எஸ்.சண்முகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளி முதன்மை முதல்வர் டி.ஆர்.பெருமாள் வரவேற்றார்.சிறாப்பு விருந்தினர்களாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பாலாஜி பங்கேற்று நாட்டு நலப்பணி திட்ட குறிக்கோள்,நோக்கங்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.விழாவின் நிறைவில் பள்ளி முதல்வர் பி.பாரதி நன்றி கூறினார்.நாட்டு நலப்பணி திட்ட பணிகளை மாவட்ட கல்வி அலுவலர்,அனைவருக்கும் இடைநிலை கல்வி அலுவலர்,திட்ட ஒருங்கிணைப்பாளர் பார்வையிட்டு மாணவர்களை பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: