முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழைய பேப்பர் வாங்குவது போல் வீட்டினுள் சென்று பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறிப்பு : குற்றவாளி 12 மணி நேரத்தில் கைது

செவ்வாய்க்கிழமை, 27 டிசம்பர் 2016      சென்னை

சென்னை, கே.கே.நகர், சங்கரநாராயணன் என்பவர் அவரது மனைவி புஷ்கலா என்பவருடன் வசித்து வருகிறார். சங்கரநாராயணன் வேலைக்கு சென்றபின்னர், மனைவி புஷ்கலா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அச்சமயம், மதியம் 01.00 மணியளவில் மூன்று சக்கர வாகனத்தில் பழைய பேப்பர்களை வாங்கும் நபர் ஒருவர் மேற்படி புஷ்கலா வீட்டிற்கு வந்து பழைய பேப்பர்கள் ஏதேனும் உள்ளதா எனக் கேட்டுள்ளளார். அதற்கு புஷ்கலா பழைய பேப்பர்கள் எதுவும் இல்லை எனக் கூறியுள்ளார். பின்னர் அந்த நபர் புஷ்கலா மட்டும் வீட்டில் தனியாக உள்ளது தெரிந்துக் கொண்டு, அவரிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக்கேட்டபோது, புஷ்கலா தண்ணீர் கொண்டு வர உள்ளே சென்றபோது, அந்த நபரும் பின்தொடர்ந்து சென்று புஷ்கலா கழுத்திலிருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார்.இதுகுறித்து புஷ்கலா கே.கே.நகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கே.கே.நகர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், அதில் குற்றவாளியின் உருவம் தெரிந்தது. மேற்படி உருவத்தை வைத்து விசாரணை மேற்கொண்டு, மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி முருகன் (எ) பாலமுருகன் (23), தூத்துக்குடி மாவட்டம் என்பவரை நேற்று முன் தீனம் (26.12.2016) இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி புஷ்கலாவிடமிருந்து திருடிய 5 சவரன் தங்கச்சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், குற்றவாளி பாலமுருகன் கடந்த 2 வருடத்திற்கு முன் ஜாபர்கான்பேட்டை, அய்யாவுத் தெருவில் உள்ள டேவிட்ராஜ் என்பவரின் பழைய பேப்பர்களை வாங்கும் கடையில் வேலை செய்து வந்ததும், தற்போது சில நாட்களுக்கு முன்பு மீண்டும் அவரிடம் வந்து வேலைக்கு சேர்ந்ததும், புஷ்கலா தனியாக இருந்ததை தெரிந்த பாலமுருகன் அவரிடமிருந்து தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட முருகன் (எ) பாலமுருகன், விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago