முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்திற்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      விழுப்புரம்
4

விழுப்புரம்,

விழுப்புரம் கலெக்டர்அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பாக மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க மகளிருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர்இல.சுப்பிரமணியன் வழங்கினார்.

சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த முஸ்லீம் சமூக மகளிர்களுக்கு உதவும் வகையில் “விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்” கலெக்டர்அவர்களை தலைவராகக் கொண்டு செயல்படுகிறது.  அதன்படி, 2015-16ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட நன்கொடை தொகை ரூ.7,83,050-க்கான அரசின் இணை மானியத்தொகை ரூ.15,70,000- ஒப்பளிப்பு செய்து ஆணையிடப்பட்டது.  ஏற்கனவே இச்சங்கத்தில் மீதமுள்ள தொகை ரூ.10,000- உடன் சேர்த்து மொத்த தொகை ரூ.15,80,000- இச்சங்கத்தில் உள்ளது.  இத்தொகையில் இன்று 361 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகையாக 47 பயனாளிகளுக்கு ரூ.2,38,000-மும், தொழில் உதவித்தொகையாக 26 பயனாளிகளுக்கு ரூ.1,31,000-மும், வறுமை உதவித்தொகையாக 35 பயனாளிகளுக்கு ரூ.1,40,000-மும், மருத்துவச் செலவு உதவித்தொகையாக 29 பயனாளிகளுக்கு ரூ.1,33,000-மும், முதியோர் உதவித்தொகையாக 33 பயனாளிகளுக்கு ரூ.1,33,000-மும், விதவை உதவித்தொகையாக 135 பயனாளிகளுக்கு ரூ.5,28,000-மும், திருமண உதவித்தொகையாக 16 பயனாளிகளுக்கு ரூ.1,20,000-மும், விவாகரத்தானவர் உதவித்தொகையாக 2 பயனாளிகளுக்கு ரூ.6000-மும், கணவனால் கைவிடப்பட்டவர்கள் உதவித்தொகையாக 22 பயனாளிகளுக்கு ரூ.88,000-மும், மாற்றுத்தினாளிகள் உதவித்தொகையாக 15 பயனாளிகளுக்கு ரூ.53,000-மும், ஆதரவற்றவர் உதவித்தொகையாக 1 பயனாளிக்கு ரூ.10,000-மும் என மொத்தம் ரூ.15,80,000- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர்இல.சுப்பிரமணியன்  வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அனந்தராம், மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்க கௌரவ செயலாளர் ஹாஜி.எம்.அப்துல் ஹாதி, உறுப்பினர்கள் ஹாஜி.எம்.ஜயாவுதீன் அஹ்மது, ஹாஜி.எ.அபுதாஹிர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: