முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தகவல் பரப்புதல் குறித்த கண்காட்சி: கலெக்டர் ராஜேஷ் துவக்கி வைத்தார்

புதன்கிழமை, 28 டிசம்பர் 2016      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்,

 

பல்கலைக்கழக மானியக்குழுவின் 12வது தி்ட்ட நிதி உதவியுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொழில் மேலாண்மைத்துறை, இந்திய தேசிய கண்டுபிடிப்பு அமைப்புடன் இணைந்து 2016ஆம் ஆண்டிற்கான "தொழில் மேம்பாட்டிற்கான புதிய சிந்தனைகளின் சமூக பரவல் மற்றும் தகவல் பரப்புதல் குறித்த கண்காட்சியுடன் இணைந்த போட்டி 28-12-2016 அன்று பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செ.மணியன், கடலூர் கலெக்டர் டி.பி. இராஜேஷ், இவர்களால் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மேலாண்மைத் துறைத்தலைவர் பேராசிரியர் சி.சமுத்ரராஜகுமார் அனைவரையும் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் தனது துவக்க உரையில் புதிய கண்டுபிடிப்புகள் மக்களிடையே அறிமுகபடுத்தலின் அவசியம் மற்றும் அதில் பல்கலைக்கழகத்தின் பங்கு பற்றி எடுத்துக் கூறினார். கலெக்டர் தனது சிறப்புரையில் புதிய கண்டுபிடிப்புகளின் அவசியத்தினை பற்றியும், இதில் மாணவர்களின் பங்கு பற்றியும் விளக்கி கூறினார். பல்கலைக்கழக மொழிப்புல முதல்வர் மற்றும் ஆட்சிமன்ற குழு உறுப்பினர் பேராசிரியர் V. திருவள்ளுவன், வாழ்த்துரை வழங்கினார். மத்திய கண்டுபிடிப்பு மையத்தின் சேவா அமைப்பாளர் விவேகானந்தன் தனது உரையில் பண்டையகாலம் முதற்கொண்டு புதிய கண்டுபிடிப்பில் மாணவர்களின் பங்கு பற்றி விளக்கினார்.

 

மேலும் பல்கலைக்கழக பல்வேறு புலங்களை சாரந்த 62 ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழைகளை கலெக்டர் வழங்கி பாராட்டினார். பொறியியல் துறை பேராசிரியர் பாஸ்கர் நன்றியுரை வழங்கினார். பல்வேறு புலங்களை சாரந்த மாணவர்கள் காட்சிப்படுத்திய கண்காட்சியினை துணைவேந்தர், கலெக்டர் முதலான அனைவரும் பார்வையிட்டு அதன் விளக்கங்கங்களை கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) க. ஆறுமுகம், கலைப்புல முதல்வர் பேராசிரியர் நாகராஜன், பல்வேறு புல முதல்வர்கள், வேதியியல் துறைத்தலைவர் பேராசிரியர் S. கபிலன், பல்வேறு துறைத்தலைவர்கள், கல்வித்திட்ட இயக்குனர் பேராசிரியர் K. மணிவண்ணன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் பேராசிரியர் கதிரேசன், பேராசிரியர்கள் மற்றும் திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சி ஏற்பாட்டின் ஒருங்கிணைப்பு பணியினை மேலாண்மைத்துறை பேராசிரியர் அ. செல்வராசு மேற்கொண்டார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்