சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ராதரிசன திருவிழாவை முன்னிட்டு முன்னேற்பாடு ஆய்வுக் கூட்டம்

சனிக்கிழமை, 31 டிசம்பர் 2016      கடலூர்
Dec 30-h

கடலூர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், சிதம்பரம் அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் (நடராஜர் கோயில்) ஆருத்ராதரிசன திருவிழா எதிர்வரும் 11.01.2017 (புதன்கிழமை) அன்று நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடு ஆய்வு கூட்டம்  கடலூர் கலெக்டர் டி.பி.ராஜேஷ், ,  தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கலெக்டர்  பொது மக்களுக்கு பாதிப்பின்றி சட்டம் ஒழுங்கை பராமரித்திடவும், குடிநீர் வசதி, தற்காலிக கழிப்பிட வசதி ஆகியவற்றை போதுமான அளவில் ஏற்படுத்தவும், மருத்துவ உதவிக்காக சிறப்பு முகாம்களை ஏற்படுத்தவும், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தவும், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் போதுமான தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்திடவும், போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பேருந்துகளை இயக்கவும், தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்யவும்;  சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு  கலெக்டர்  அறிவுறுத்தினார்.  சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்படி பணிகளை அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைத்து சிறப்பாக நிறைவேற்றிட கலெக்டர்  அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.விஜயகுமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் மதிவாணன், சிதம்பரம் உதவி காவல் கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா,  சிதம்பரம் வருவாய் கோட்டாட்சியர் விஜயலட்சுமி, இணை இயக்குநர் (மருத்துவ மற்றும் குடும்ப நலப்பணிகள்) டாக்டர் எஸ்.மாதவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெ.சண்முகம், சிதம்பரம் நகராட்சி ஆணையர் ஜெகதீசன், உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர் ஆர்வி.ரவி, தீயணைப்பு அலுவலர் திலகர், போக்குவரத்துறை அலுவலர் உள்ளிட்ட அரசு  அலுவலர்களும், அருள்மிகு நடராஜர் திருகோயில் தீட்சிதர்களும் கலந்து கொண்டனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: