ஸ்டெர்லைட் நிறுவனம் மூலம் இளைஞர்களுக்கு நவீண தொழிற்பயிற்சி வகுப்புகள் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி,

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தாமிர முத்துக்கள் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்காக தொழிற்பயிற்சிகளை வழங்கி வருகிறது. கடந்த2014ம் ஆண்டு இத்திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் எலக்ட்ரீசியன் பயிற்சி, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் பயிற்சி, தையல் பயிற்சி உள்ளிட்டமுக்கிய தொழிற்பயிற்சிகள் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த பயிற்சிகளின் மூலம் இதுவரையில் 614 இளைஞர்கள், இளம்பெண்கள்பயனடைந்துள்ளனர். வெறும் பயிற்சியுடன் மட்டுமல்லாமல் பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு அவர்கள் பயிற்சி தகுதிக்கேற்ப வேலைவாய்புகளும்உருவாக்கித்தரப்படுகின்றன.இந்நிலையில் தற்போது அளிக்கப்பட்டு வரும் பயிற்சிகளுடன் மேலும் நவீண தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளான போர்க்லிப்ட் ஆப்பரேட்டர், பாங்கிங் சர்வீஸ், வெல்டிங் மற்றும் சோலார் டெக்னீசியன் உள்ளிட்ட பயிற்சிகளும் துவக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 45 நாட்கள் இந்தபயிற்சி வகுப்புகள் நடக்கின்றன.

 

இந்த பயிற்களின் துவக்க விழா நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன துணை தலைவர் தனவேல் வரவேற்றார். ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி ராம்நாத்தலைமை வகித்தார். இதில் என்டிபிஎல் அனல் மின் நிலைய தலைமை செயல் அதிகாரி நீலகண்டபிள்ளை, வ.உ.சி கல்வி அறக்கட்டளை தலைவர்சொக்கலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றிவைத்து பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்தனர்.

 

மேலும் நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட் நிறுவன மருத்துவ அதிகாரி டாக்டர் கைலாசம், தொழிற்பயிற்சி திட்ட மேலாளர் ராஜன், மேலாளர் சுகந்திசெல்லதுரைஉள்ளிட்டவர்களும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: