ஈரோடு வட்டம் பவானி நகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அமைச்சர் கருப்பணன் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு
01 01 2017 ph 4

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சியில்    தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.4 கோடி மற்றும் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ.11இலட்சம் என மொத்தம்; ரூ.4.11 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர், தலைமையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தி கே.சி.கருப்பணன் அவர்கள் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம், பவானி நகராட்சி செங்காடு, பெரியார்நகர், தலைமை நீறேற்றும் நிலையம், ராஜகணபதிசாலை, வர்ணபுரம் 5வது வீதி, பெருமாள்புரம், சின்னப்பா லே அவுட், குருநாதன்தெரு முதல் வீதி, 2வது வீதி மற்றும் கீழமேல் ரோடு, திருவள்ளுர் நகர், சோமசுந்தரபுரம், பழனிபுரம் - 1முதல் 7வது தெரு வரை, வடக்குப்பள்ளிரோடு, சவுண்டம்மன்கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு 3.65 கிலோமீட்டர் நீளமுள்ள தார்சாலை, 2.03 கிலோமீட்டர் நீளமுள்ள மழைநீர் வடிகால், 3 சிறுபாலங்கள்  மேலும் தேவராஜ் பிள்ளை சந்து, காமராஜ்நகர் மேட்டூர் மெயின்ரோடு சாலை, 0.18 கிலோ மீட்டர் நீளமுள்ள பேவர் பிளாக் ஆகிய பணிகளுக்கு ரூ.2கோடி மதிப்பீட்டிலும், தேவபுரம், மண்தொழிலாளர் முதல்தெரு, கல்தொழிலாளர் 1 முதல் 3வது தெரு, சுண்ணாம்பு சூலை முதல் 2வது குறுக்கு வீதி, கந்தன்கடைரோடு, மாரியம்மன்கோவில் தெரு, தந்தை பெரியார் தெரு, மக்கான் தெரு. பழைய பேருந்து சாலை, ஜோதி விநாயகர் கோவில் தெரு ஆகிய பகுதிகளுக்கு 3.01 கிலோமீட்டர் நீளமுள்ள தார்சாலைகளும், 1.71 கிலோமீட்டர்  நீளமுள்ள மழைநீர் வடிகால், ஒரு சிறுபாலம் மற்றும் நீதிமன்ற தென்புற சாலை 1 கிலோ மீட்டர் நீளமுள்ள பேவர் பிளாக் ஆகிய பணிகளுக்கு ரூ.2கோடி மதிப்பீட்டிலும் தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் பூமிபூஜையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் பவானி நகராட்சியில் 11வது வார்டு தேவபுரம் பூங்கா மேம்பாடு செய்ய ரூ.4இலட்சம் மற்றும்  24வது வார்டு மீன்மார்கெட் வளாகத்தில் நியாயவிலைக்கடை அமைக்க ரூ.7இலட்சம் என மொத்தம் ரூ.11இலட்சம் மதிப்பீட்டில் பூமிபூஜையிட்டு பணிகளை மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.கே.சி.கருப்பணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்;வின்போது திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.வி.சத்தியபாமா, மாவட்ட வருவாய் அலுவலர்  ரெ.சதீஸ், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் திரு.கிருஷ்ணராஜ், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் திருமதி. நர்மதாதேவி, உதவி பொறியாளர் (நகராட்சி)  ஜெயலட்சுமி, நகராட்சி பொறியாளர் திரு.சிவக்குமார், உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: