மாநில அறிவியல் பயிற்சி முகாம் ஈரோடு பள்ளி மாணவர் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜனவரி 2017      ஈரோடு
1-1-17 erodekongucollege no 2

ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான அறிவியல் புத்தாக்கப் பயிற்சி முகாமில் சிறப்பாக செயல்பட்ட ஈரோடு பள்ளி மாணவருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது.

அறிவியல் கண்டுபிடிப்பில் இளம் விஞ்ஞானிகளை உருவாக்குவதற்காக மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் ஆராய்ச்சி குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம் கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் டிசம்பர் 26 முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்றது.முகாமில் ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 16 பள்ளிகளில் இருந்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 156 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். முகாம் நிறைவு விழா நடைபெற்றது.

சாம்பியன் பட்டம்

விழாவுக்கு, கல்லூரி அறக்கட்டளை அறங்காவலர் பி.சி.பழனிசாமி தலைமை வகித்தார். அறங்காவலர் பி.சச்சிதானந்தன், கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ, முதல்வர் என்.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சென்னை பல்கலைக்கழக உயிரி வேதியியல் துறைப் பேராசிரியர் எஸ்.நிரஞ்சலி தேவராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முகாமில் சிறப்பாகப் பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு வழங்கினார்.இதில், ஈரோடு எலவமலை கிரேஸ் இன்டர்நேஷனல் சீனியர் செகன்டரி பள்ளியின் பிளஸ் 1 மாணவர் எம்.சாகித்யகுமாருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. அதேபோல, சாகர் வித்யா பவன் பள்ளியைச் சேர்ந்த பி.வர்ஷினி, கொங்கு வேளாளர் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீவத்சன் ஆகியோருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. விழாவில், முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ.கே.வித்யா, வி.கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்: