முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணிகள் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      கடலூர்
Image Unavailable

சிதம்பரம்,

 

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் பகுதியினையும் புவனகிரி பகுதியினையும் இடையே உள்ள வெள்ளாற்றின் குறுக்கே உயர் மட்ட பாலம் கட்டும் பணியினை சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

 

அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கீரப்பாளையம் பகுதிதிக்கும் புவனகிரி பகுதிக்கும் இடையே வெள்ளாறின் குறுக்கே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்தது இந்த உயர் மட்ட பாலம் ஆகும். இப்பாலம் தான் புவனகிரியினை சுற்றி உள்ள சுமார் 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை இனைத்தும் மாவட்டத்தின் தலைநகரான கடலூர் மற்றும் விருதாசலம் மார்கமாக செல்லும் பேருந்துகளுக்கு போக்குவரத்தினை பூர்த்தி செய்தும் வந்துள்ளது. இப்பாலம் தற்போது வலுவடைந்துள்ளது. இதனை அறிந்த மறைந்த முதலமைச்சர் அம்மா உடனடியாக தற்காலிக பாலம் அமைத்தும் மேலும் தற்போது பயன் பாட்டில் உள்ள பாலத்தினை போக்குவரத்திற்கு ஏற்றார்போல் தற்காலிகமாக சரிசெய்தும் உத்தரவிட்டார்கள்.அதனை தொடர்ந்து கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற சட்டமன்ற கூட்ட தொடரில் பேரவை விதி எண் 110 ன் கீழ் சுமார் 225 மீட்டர் நீளம் உடைய இப்பாதைக்கு புதிய பாலத்தினை ரூ.23 கோடி செலவில் கட்டிட புரட்சித்தலைவி அம்மா உத்தரவிட்டார்கள். அதன் அடிப்படையில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் அப்பணிகளை தற்போது பார்வையிட்டு ஒப்பந்தகாரர்களிடம் விரைந்து முடித்து பொது மக்களின் பயன் பாட்டிற்கு விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.ஆய்வின் போது கீரப்பாளையம் ஒன்றிய கழக செயலாளர் ஜெயபாலன், புவனகிரி நகர கழக செயலளர் செல்வகுமார், சிதம்பரம் நகர கழக செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய அவைத் தலைவர் கோவி.ராசாங்கம், விநாயகம், மு.கதர் வாரிய உறுப்பினர் தன.ஜெயஒன்றிய இளைஞரணி செயலாளர் செழியன், அம்மா பேரவை செயலாளர் இளங்கோ, வீராசாமி, ரகுநாதன், தொழில் நுட்பப்பிரிவு நிர்வாகிகள் கார்த்திகேயன், சுவாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் பொறியாளர்கள் போத்திராஜ், பழனிகுமார், காளைபாண்டி,கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்