முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் - மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2017      திருவள்ளூர்

திருவள்ளுர் மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் - மற்றும் புதுவாழ்வுத்திட்டத்தின் கீழ், திருவள்ளுர் மாவட்டத்தில் 2016 – 2017 ஆம் ஆண்டில் படித்து வேலையற்ற ஆண் ஃ பெண் இருபாலருக்கும் வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் வேலைவாய்ப்பு முகாம் 07.01.2017 அன்று காலை 10.00 மணி முதல் கடம்பத்தூர் வட்டாரம், கடம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு வகையான வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளனர்.

 

இம்முகாமிற்கு குறைந்தபட்சம், 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு (டிப்ளாமோ ஃ ஐ.டி.ஐ) படித்த ஆண் ஃ பெண் இருபாலரும் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல வேலைவாய்ப்பினை பெற்றிட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறது. வயது, கல்வித்தகுதி முதலான உரிய ஆவணங்களுடன் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.

 

மேலும், விவரங்களுக்கு மாவட்ட திட்ட மேலாளர், புதுவாழ்வு திட்டம், திருவள்ளுர் மாவட்டம் தொலைபேசி எண் 044 – 27665252, 9443468981, 7373155466, 7373155344. மற்றும் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருவள்ளுர் மாவட்டம், தொலைபேசி எண் - 044 – 27664528, 9445034210, 9445034211, 9445034212 தொடர்ப கொள்ளலாம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்