முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மாயாவதி- 100 பேரில் 36 வேட்பாளர்கள் முஸ்லிம்கள்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

லக்னோ, உ.பி. மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் முதல்கட்டமாக 100 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பகுஜன் சமாஜ் கட்சி.

உத்தரப் பிரேதச சட்டப்பேர வைத் தேர்தல், வரும் பிப்ரவரி 11-ம் தேதி தொடங்கி மார்ச் 8-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடை பெறும் என, தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அறிவித்தது.

ஆளும் சமாஜ்வாதி கட்சியில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக பிரச்சினை நிலவி வரும் நிலையில், முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தமுள்ள 403 தொகுதிகளுக்கு, முதல் கட்டமாக 100 இடங்களில் போட்டி யிடும் வேட்பாளர்கள்

பெயர்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது. மாநி லத்தின் மொத்த வாக்காளர் எண் ணிக்கையில் 20 சதவீதம் முஸ் லிம்கள். பகுஜன் சமாஜ் நேற்று அறிவித்த 100 பேரில் 36 வேட் பாளர்கள் முஸ்லிம்கள்.

தற்போது 20 மாவட்டங்க ளுக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மட்டும் வேட் பாளர்கள் அறிவிக்கப்பட்டுள் ளனர். எஞ்சிய தொகுதிகளுக்கு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக் கப்படுவார்கள் என, கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.

லக்னோவில் நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு செய்தி யாளர்களிடம்பேசிய மாயாவதி, ‘403 தொகுதிகளுக்கும் வேட் பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டனர். தலித் வேட்பாளர்கள் 87 தொகுதிகளிலும், முஸ்லிம்கள் 97 இடங்களிலும், இதர பிற் படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வர்கள் 106 இடங்களிலும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்.
உயர் சாதிப் பிரிவினருக்காக 113 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பிராமணர்கள் 66 இடங் களிலும், சத்ரியர்கள் 36, கயஸ் தாஸ், வைசியர் மற்றம் பஞ்சாபி 11 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்