பாரத சாரண சாரணியர் சார்பில் தேசிய அளவிலான திரளணி முகாம்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருச்சி
ttp

கர்நாடக மாநிலம் மைசூரில் டிச.29 முதல் ஜன.4 வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலிருந்து 16 சாரணர்கள் 16 சாரணியர்கள் மாநிலப் பொறுப்பாளர் செல்லதுரை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன், உதவி செயலாளர் சக்கரபாணி, சாரண ஆசிரியர்கள் ரவி, ராஜலெட்சுமி, வழிகாட்டி தலைவிகள் ஜெயம், பரிமளாகாந்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அங்கு நடைபெற்ற தனித்திறன் போட்டிகள் கயிறு ஏறுதல், வலை ஏறுதல், முள்கம்பியில் படர்ந்து செல்லுதல், நடைபயணம், சமுதாய மேம்பாட்டு திட்டம் போன்றவற்றில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை பெற்றுள்ளனர்.

 

இம் முகாமில் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாரணர்கள் - 2பேர், சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி - 6பேர், திருவாரூர் ஜி.ஆர்.எம். பெண்கள் மேல்நிலைப்பள்ளி சாரணியர்கள் - 10பேர், நன்னிலம் வள்ளலார் குருகுலம் மெட்ரிக் பள்ளி சாரணர்கள் -8பேர், சாரணியர்கள் - 6பேர் கலந்துகொண்டனர். தமிழகத்தின் சார்பில் கேட்வே புராஜக்ட் திருவாரூர் மாவட்டத்தின் சார்பாக சிறப்பாக செய்யப்பட்டது.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: