தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்திய கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு :

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      திருச்சி
pro try

திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. பரிசுத் தொகை வழங்கிப் பாராட்டு தெரிவித்தார்.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குத் மாவட்ட கலெக்டர் பரிசுத் தொகை வழங்கி பாராட்டினார்.

தமிழ் வளர்ச்சித் சார்பில் துறை பல ஆண்டுகளாக மாணவ, மாணவியர்களிடையே தமிழில் எழுத்தாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தி வருகின்றது. இப்போட்டிகளில் 75 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

அம்மா என்றால் என்ற தலைப்பில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் அய்மான் கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்;ந்த மாணவி ஆ.டெய்சி முதல்பரிசும், திருச்சி அரசு வேளாண்மைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி இ.ஜெயந்தி இரண்டாம் பரிசும், புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரியைச் சேர்ந்த மாணவி கு.கௌசல்யா மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அறநெறி நில், அன்னைத் தமிழே ஆட்சிமொழி, இளமையில் கல், உள்ளிட்ட பத்து தலைப்புகளில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் வை.பாலசுப்ரமணியன் முதல்பரிசும், அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ச.சந்தோஷ்குமார் இரண்டாம் பரிசும், ஜமால் முகமது கல்லூரியைச் சேர்ந்த மாணவன் சை.ஷேக் அலிமாஸ் அலி என்ற மாணவன் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

மேலும் முதல் பரிசுப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசுப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.7 ஆயிரமும், மூன்றாம் பரிசுப் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் பரிசுத் தொகையை மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. வழங்கிப் பாராட்டு தெரிவித்தார். தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் முனைவர் துரை.தம்புசாமி மற்றும்; அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: