தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் துரைக்கண்ணு தலைமையில் ஆய்வு

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      தஞ்சாவூர்
pro thanjai

தஞ்சாவூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்டக்குழு வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையில், போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சத்தியபிரதாசாஹ{, மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலையில் நேற்று (07.01.2017) நேரடியாக கள ஆய்வு மேற்கொண்டனர்.

இவ்வாய்வின் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் புதுப்பட்டிணம், வடபாதி கோக்கேரி, மேலஉளுர், சொக்கானவூர், தாமரங்கோட்டை, அதிராம்பட்டிணம், சோலைக்காடு, ருத்ரசிந்தாமணி, ஈச்சங்கோட்டை நத்தம், பூதலூர், கோவில்பத்து ஆகிய இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து பத்திரிக்கையாளர் பயணத்தின் போது தெரிவித்ததாவது,

இந்த ஆண்டு பருவ மழை எதிர்பார்த்ததை விட குறைவாக பெய்துள்ளதால், சம்பா, தாளடி பயிர் போதிய தண்ணீர் இல்லாமல் கருகி உள்ளது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் வறட்சி ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் நலன் காக்கும் அம்மாவின் அரசு மூன்று தினங்களுக்கு முன் நடைபெற்ற முதல்வர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் அந்தந்த அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகளுடன், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் விவசாயிகள் பயிர் செய்துள்ள விளைநிலங்களை நேரடியாக கள ஆய்வு செய்து தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், முதல்வர் அவர்களின் ஆலோசனையின்படியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகபொதுச் செயலாளர் சின்னம்மா அவர்களின் வழிகாட்டுதலின் படியும் இன்று நேரடியாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2012-2013 ஆண்டுகளில் வறட்சி ஏற்பட்ட பொழுது மறைந்த முதல்வர் அம்மா அவர்களின் அரசு நிவாரணம் வழங்கியது போல் தற்போது நிவாரண உதவித் தொகையை தமிழக அரசு கண்டிப்பாக வழங்கும். அம்மா விவசாயிகளின் பயிர்களை காப்பீடு செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள். அதன்படி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை வழங்கப்படும். என்றும் விவசாயிகள் நலன் காக்கும் அம்மாவின் அரசு விவசாயிகளின் நலன் காக்கவும், வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிவாரண உதவித்தொகை வழங்கும் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்கள்.

பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் வறட்சி தொடர்பான ஆய்வுக் கூட்டம் வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தலைமையிலும், போக்குவரத்து ஆணையர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சத்தியபிரதாசாஹ{, மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இவ்வாய்வின் போது மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கு.பரசுராமன் (தஞ்சாவூர்), ஆர்.கே. பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்) சி.வி.சேகர் (பட்டுக்கோட்டை), ம.கோவிந்தராசு (பேராவூரணி), மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்கள் எம்.ரெத்தினசாமி, ராம்குமார், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தலைவர் எஸ்.மோகன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள், கோபிநாதன், சூரியநாரயணன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் த.சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர் குருமூர்த்தி, ரவிச்சந்திரன், திருமால், கஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: