கோவில்பட்டியில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள்

சனிக்கிழமை, 7 ஜனவரி 2017      தூத்துக்குடி
kvp 1

கோவில்பட்டி

ரோட்டரி மாவட்ட சாலைபாதுகாப்பு பிரிவு சார்பில் பாதயாத்திரை பக்தர்களுக்கு சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டும்முகாம் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டவர்மங்கலம் விலக்கில் வைத்து நடைபெற்றது.

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் திருச்செந்தூர் முருகன்கோவிலுக்கு விருதுநகர், சிவகாசி, சாத்தூர், கயத்தார், மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து கோவில்பட்டி, பசுவந்தனை வழியாக திருச்செந்தூருக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்கதர்கள் சென்று வருவது வழக்கம். பாதயாத்தரை பக்தர்கள் பாதுகாப்பாக செல்வதற்கும் விபத்துக்களை தவிர்ப்பதற்கும், எதிர் மற்றும் பின்புறம் வரும் வாகனங்களுக்கு பாதயாத்திரை பக்தர்கள் நடந்து வருவது தெரிவதற்கு சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களின் பைகள் மற்றும் காவடி, தேர், போன்றவற்றில் ஒட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி மாவட்ட சாலை பாதுகாப்பு தலைவர் முத்துச்செல்வன் தலைமை வகித்தார். பாரதியார் நினைவு அறக்கட்டளை தலைவர் முத்துமுருகன் முன்னிலை வகித்தார். கோவில்பட்டி போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பக்தர்களின் பைகளில் சிகப்பு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் இந்நிகழ்ச்சியில் பாதயாத்திரை பக்தர்கள் மற்றும் பாண்டவர்மங்கலம் பாதசாரிகள் மற்றும் மாணவர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: