தென்காசி
கீழக்கலங்கலில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சுரண்டையை அடுத்துள்ள கீழக்கலங்கல் யாதவர் கோகுல திருமண மண்டபத்தில் வைத்து தென்காசி ஸீட்லிங் அக்ரோ பிரைவேட் லிமிடெட், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவ கல்லூரி மருத்துவமனை சார்பில் இலவச பொதுமருத்துவ முகாம் மற்றும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஸீட்லிங் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மெகபூப்கான் தலைமைதாங்கினார். நிர்வாகிகள் நவுஷாத், முகம்மதுசுபின், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் மாரிக்குட்டி ஆகியோர் முன்னிலைவகித்தனர். வேளாண் அலுவலர் ஜானகிராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். ஜீஜாமெகபூப்கான் குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் ஸ்ரீமுகாம்பிகா மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வினுகோபிநாத் தலைமையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், பெண்களுக்கான சிறப்பு மகப்பேறு மற்றும் மகளிர் நோய் மருத்துவர், தோல் நோய் சிறப்பு மருத்துவர், கண்நோய் சிறப்பு மருத்துவர், எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர், பல் மருத்துவர் உள்பட 32சிறப்பு மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். அதனைதொடர்ந்து நிகழச்சியில் சிறப்பு விருந்தினராக ஊத்துமலை காவல் நிலைய காவல் ஆய்வாளர் சங்கர்கண்ணன் கலந்து கொண்டு கீழக்கலங்கல் அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் ஏழை, எளிய மாணவ, மாணவியர்கள் 22பேருக்கு தலா ரூபாய் 1000,மும். ரூபாய் 3000மதிப்பில் 6பேருக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழச்சியில் பண்பொழி பேரூராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன், சாமித்துரை, மற்றும் மருத்துவமனை செவிலியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் பெற்று சென்றனர். முடிவில் ஸீட்லிங் அக்ரோ பிரைவேட் லமிடெட் முதன்மை செயல் அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார்.