முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகர் சங்க செயற்குழு கூட்டம்: நாசர் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      சென்னை

சென்னையில் நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

 

தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நடந்தது.

 

கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பொன்வண்ணன் மற்றும் ராஜேஷ், பிரசன்னா, கோவை சரளா, பூச்சிமுருகன், மனோபாலா, நந்தா, உதயா, சங்கீதா, சோனியா, தினேஷ், ஜூனியர் பாலையா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை மாற்றுவது குறித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டிருப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. அந்த சிலையை மெரினா கடற்கரையில் மாற்றி வைப்பதற்கு அரசிடம் வலியுறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கடற்கரையில் அமைக்காவிட்டால் கோயம்பேடு, கத்திப்பாரா சந்திப்பு போன்ற மக்கள் கூடும் ஏதேனும் ஒரு இடத்தில் வைப்பதற்கு அரசிடம் மனு கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த கட்டிடத்துக்கு தேவையான நிதியை எவ்வாறு திரட்டுவது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களையும் செயல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago