முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஐடியில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் முன்னேற்ங்கள் குறித்து 4 நாள் உலகளாவிய மாநாடு தொடங்கியது

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      வேலூர்
Image Unavailable

வேலூர் :விஐடி பல்கலைக்கழகத்தில் 4 நாள் நடைபெறும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் (GCASTM-2017)  பற்றிய உலகளாவிய மாநாடு இன்று தொடங்கியது.இதில் மாநாடு பற்றிய சிறப்பு குறுந்தகட்டினை கௌரவ விருந்தினர் அமெரிக்க நாட்டின் ஹார்வேர்டு மருத்துவ  கல்லூரி பேராசிரியர் டாக்டர் கிரிஸ்டின் ஒல்ஸன் வெளியிட அதனை விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். விஐடி பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மையில் முன்னேற்றங்கள் என்பது பற்றிய 4 நாள் உலகளாவிய மாநாடு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர்கள் ஆராய்ச்சி மாணவர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாடு தொடக்க விழா விஐடியில் உள்ள டாக்டர் சென்னா ரெட்டி அரங்கில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வருகை தந்தவர்களை விஐடி இணைதுணை வேந்தர் முனைவர் எஸ்.நாராயணன் வரவேற்றார். மாநாட்டின் நோக்கம் பற்றி இணைதுணை வேந்தர் முனைவர் வி. ராஜு விளக்கி கூறினார். மாநாடு தொடக்க விழாவிற்கு விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் தலைமை வகித்து பேசியதாவது: உலகமயமாக்களில் கல்வியும் உலகமயமாக்கப்பட்டுள்ளதின் மூலம் மாணவர்கள் எந்த நாட்டிற்கும் சென்று உயர்கல்வி பயிலும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. விஐடி பல்கலைக்கழகம் 2005 ஆண்டு முதல் கற்றல் கற்பித்தல் முறையிலான உயர்கல்வி வழங்குவதின் காணமாக உலகில் உள்ள  முன்னணி பல்கலைகழகங்களுடன் கல்வி பரிவர்தனைக்கு ஒப்பந்தம்  செய்யப்பட்டுள்ளது. ஆராய்ச்சி கல்விக்கு  நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அமெரிக்கா நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் ஆராய்ச்சி கல்விக்காக ஆண்டுக்கு நூறுமுதல் இருநூறு கோடி டாலர் அளவிற்கு  செலவிட்டு வருகின்றன. ஆனால் நமது இந்திய நாட்டில் அரசு  ஆராய்ச்சி கல்விக்காக செலவிடும் தொகை சுமார் 700 கோடி ரூபாய் அளவிற்கு மட்டுமே உள்ளது. இதில் ஐஐஎஸ்சி ஐஐடிகள் 300 முதல் 400 கோடி செலவிடுகிறது. நாட்டில் மத்திய மாநில அரசுகள் ஆராய்ச்சி கல்விக்காக அதிக நிதி ஒதுக்க வேண்டும். விஐடி பல்கலைக்கழகம் 2011ஆண்டு முதல் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 2015-16 ஆம் ஆண்டில் அதிக அளவில் ஆராய்ச்சி இதழ்களை வெளியிட்டதில்  நாட்டில் உள்ள ஐஐஎஸ்சி மற்றும் ஐஐடிக்களை பின்னுக்கு தள்ளி முதலிடம் பெற்றது என்றார். நிகழ்ச்சியில் அமெரிக்க நாட்டின் ஹார்ட்வேர்டு மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் கிரிஸ்டின் ஓல்ஸன் கௌரவ விருந்தினராக பங்கேற்று மாநாட்டின் சிறப்பு குறுந்தகட்டினை வெளியிட விஐடி வேந்தர் டாக்டர் ஜி.விசுவநாதன் பெற்றுக் கொண்டார். இதில் நியுயாரக் ஸ்டேட் யுனிவர்சிட்டி பேராசிரியர் முனைவர் ஜான் பே வெஸ்டன் கரோலினா யுனிவர்சிட்டி பேராசிரியர்கள் முனைவர் ஹக் ஜேக் முனைவர் பால் யானிக் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் விஐடி துணைவேந்தர் முனைவர் ஆனந் ஏ.சாமுவேல் சிறப்புறையாற்றினார். மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட விஐடி உள்ளிட்ட பல்வேறு பல்கலைக்கழகங்களின்  ஆராய்ச்சி திட்டங்களில் சிறந்தவைகளாக 10 தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சி திட்டங்கள் மேம்படுத்தப்பட்டு இந்தாண்டு ஜீன் மாதம் அமெரிக்காவில் நடைபெற உள்ள உலக அறிவியல் மாநாட்டில் சமர்பிக்கப்பட உள்ளது.  முடிவில் பேராசிரியை மீனாட்சி  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்