திருவண்ணாமலை அருகே வேட்டவலம் மனோன்மணி கோவிலில்விலை மதிப்பற்ற மரகத லிங்கம் கொள்ளை

திங்கட்கிழமை, 9 ஜனவரி 2017      திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுள்ள ஸ்ரீமனோன்மணி கோவிலில்  விலை மதிப்பற்ற மரகத லிங்கத்தை மர்ம கும்பல் கொள்ளை அடித்துள்ளது. வேட்டவலம் ஜமீன் வளாகத்தில் மலைமீது ஸ்ரீமனோன்மணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பராமரிப்பு மற்றும் விழாக்கள் ஜமீன் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். தினமும் காலை 9 மணிக்கும், மாலை 5 மணிக்கும் கோவில் திறக்கப்பட்டு விலைமதிப்பற்ற மரகதலிங்கத்திற்கும், ஸ்ரீமனோன்மணி அம்மன் மற்றும் பிற தெய்வங்களுக்கும் அபிஷேகமும் சிறப்பு அலங்காரமும் நடைபெறுவது வழக்கம். மார்கழி மாதம் மட்டும் விடியற்காலை 5 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். சுமார் 10 ஆண்டுகளாக சண்முகம் (வயது 55) கோவில் குருக்கள் பணிபுரிந்து வருகிறார். (ஞாயிறு அன்று) வழக்கம்போல் மாலை 6.30 மணிக்கு கோவிலை பூட்டிவிட்டு வந்துவிட்டார். நேற்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியளவில் வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோவிலின் தெற்குபுற வாசலை திறந்தபோது கோவில் கிழக்கு வாசல் திறந்த இருந்ததையும், பூஜை பொருட்கள் சிதறி கிடைப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே கோவிலிலிருந்து இறங்கி வந்து ஜமீன்தார் மகேந்திர பந்தாரியாரிடம் தகவலை தெரிவித்தார். உடனே இதுகுறித்து வேட்டவலம் காவல்நிலையத்தில் புகார் செய்தார்   உடனே விரைந்து வந்த காவல்துறையினர் கோவிலை திறந்து பார்த்தபோது மரகத லிங்கம் லாக்கரில் இருந்து எடுத்துச்சென்றிருப்பதையும், அம்மன் வெள்ளி கிரீடம், அம்மன் வெள்ளி பாதம், அம்மன் வெள்ளி ஒட்டியானம், மரகதலிங்கம் வைத்திருக்கும் வெள்ளி நாகபரணம், அம்மன் தங்கத்தாலி ஆகியவை திருடி சென்றிருப்பதையும், சுவரில் துளை போட்டிருப்பதையும் கண்டு பிடித்தார்கள். கைரேகை துறையைச் சேர்ந்த சுந்தர்ராஜன் தலைமையிலா குழுவினர் வந்து கைரேகை பதிவுகளை ஆய்வு செய்தனர். உடனே மோப்ப நாய் டெசி வரவைக்கப்பட்டது. மோப்ப நாய் கோவிலை இரண்டு முறை சுற்றி விட்டு கிழே இறங்கி சிறிது தூரம் வந்து நின்று விட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்று காவல்துறையால் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: