பகுஜன் சமாஜ் கட்சி சட்டமன்ற தொகுதி நிர்வாகி தேர்வு கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2017      வேலூர்

அரக்கோணம் நகரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடந்தேறியது. இது குறித்து விவரம் வருமாறு.    வேலூர் மாவட்டம், அரக்கோணம் நகரில் தனியார் மண்டபம் ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சி அரக்கோணம் சட்ட மன்ற தொகுதி மற்றும் ஒவ்வொரு கிராம செக்டர்களுக்கான நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் திருத்தணி மைக்கேல் தாஸ் தலைமை தாங்கினார்.    மாவட்ட பொது செயலாளர் பிரவீன்குமார் வரவேற்று பேசினார். பாராளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் பொன்.கிருஷ்ணன், மற்றும் பா.சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிர்வாகிகள் தேர்வு கூட்டத்தில் சட்ட மன்ற தொகுதி தலைவராக முதலில் பா.சுதாகர் தேர்ந் தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், துணை தலைவராக சிவா, பொது செயலாளராக ஜீவரத்தினம்,பொருளாராக ஜி.ஞானசேகரன், அலுவலக செயலாளராக இரா.லோகநாதன். மற்றும் இளைஞர் அணி தலைவராக கௌதம், செயலாளராக அசோக், பொருளாளராக அருண். மாணவரணிகளுக்கு அருண், வினோத்காம்ப்ளி, மகளீரணிக்கு தேன்மொழி, நித்யாசீலி ஆகியோருடன்தாலுக்கா முழுவதற்குமான 24 கிராமங்களின் செக்டர் தலைவர் பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர். அனைவரும் அண்ணல் அம்பேத்கர் பெயரால் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். கூட்டத்தின் இறுதியில் பிரேம்குமார் நன்றி கூறினார்.   

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: