முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி மாவட்டத்தில் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் வழங்கினார்

புதன்கிழமை, 11 ஜனவரி 2017      தர்மபுரி
Image Unavailable

தருமபுரி:தமிழக அரசால் வழங்கக்கூடிய விலையில்லா பொங்கல் பரிசு தொகுப்பு நமது மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 66 லட்சம் மதிப்பில் தகுதியுள்ள 3,68,421 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதனடிப்படையில் நேற்று (11.01.2017) இரண்டாம் கட்டமாக கெரகோடஅள்ளி, காரிமங்கலம் அகரம் பைபாஸ் ரோடு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அருகில் உள்ள நியாய விலைக்கடை மற்றும் கடை எண். 41.சி.1, பாலக்கோடு டவுன் தீர்த்தகிரி நகர், வார்டு எண். 7 ஆகிய பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பினை கலெக்டர் கே.விவேகானந்தன்,  தலைமையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அவர்கள் வழங்கி பொதுமக்களிடையே தெரிவித்ததாவது :-  காரிமங்கலம் வட்டம், கெரகோடஅள்ளி மற்றும் பாலக்கோடு டவுன், தீர்த்தகிரி நகர், 7-வது வார்டு ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசு தொகுப்புகளான 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு துண்டு போன்றவற்றை  உயர்கல்வித்துறை அமைச்சர்                                 கே.பி. அன்பழகன் அவர்கள் வழங்கினார்.தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 1007 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கட்டுப்பாட்டில் 40 நியாயவிலைக் கடைகளும் ஆக மொத்தம் 1047 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. 01.06.2011க்கு பிறகு தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 13 முழு நேர நியாய விலைக்கடைகள், 47 பகுதிநேர நியாய விலைக்கடைகள் ஆக மொத்தம் 60 நியாய விலைக்கடைகள் துவங்கப்பட்டுள்ளது எனவும், அதேபோல் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 1 முழுநேர நியாய விலைக்கடையும், 5 பகுதி நேர நியாய விலைக் கடைகளும் ஆக மொத்தம் 6 நியாய விலைக் கடைகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது என  உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார். இவ்விழாவில் கோட்டாட்சியர்  இராமமூர்த்தி, இணைப்பதிவாளர் (பொ)           பாண்டியன்,  துணை பதிவாளர்கள்  ஆர். மணிகண்டன்,  சரவணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  இரா. சண்முகசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்  டி.ஆர். அன்பழகன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர்கள்  கே. சம்பத்,  பி. செந்தில்குமார்,  கிரி, தொடக்க வேளாண்மை சங்க செயலர்கள்  சோமு,  துரைராஜ்,  குப்புசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர்  எம். பழனிசாமி, வட்டாட்சியர்கள்  கண்ணன் மற்றும்  அதியமான், சங்கத்தின் இயக்குநர்கள், சார்பதிவாளர்கள், பொது விநியோத்திட்ட கள அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்