தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் பொங்கல் விழா

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி,

ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிரமுத்துக்கள் சார்பில் பொங்கல் விழா நடந்தது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தூத்துக்குடி பெமினா சங்கத்தினரும் இணைந்து பொங்கலைகொண்டாடினர். ஸ்டெர்லைட் நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பொதுமேலாளர் சோனிகா முரளிதரன் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் ஸ்டெர்லைட்நிறுவன துணை தலைவர் முருகேஸ்வரன், இணை துணை தலைவர்  திவாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  இதில் பொங்கலிட்பட்டு அலுவலர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதுபோல ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தொழிற்பயிற்சி மையமான தாமிரமுத்துக்கள் வளாகத்திலும் பொங்கல்    விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்குதுணை தலைவர் குமாரவேந்தன் தலைமை வகித்தார். மேலும் தொழிற்பயிற்சி மைய முதல்வர் லெட்சுமணன் முன்னிலை  வகித்து பேசினார். பயணிகள்நலச்சங்க தலைவர் கல்யாணசுந்தரம்  உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பொங்கல் விழா குறித்து பேசினர். இதில் தாமிர முத்துக்கள் தொழிற்பயிற்சி மையமாணவ மாணவியர், ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்: