திருச்சி மாவட்டத்தில் ஆதார் எண் பெறாதவர்கள் வட்டாட்சியர் அலுவலக ஆதார் உதவி மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் : கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி தகவல்

வெள்ளிக்கிழமை, 13 ஜனவரி 2017      திருச்சி

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதார் எண் பெறாதவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் உதவி மையங்களை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அனைத்து வட்டாட்;சியர் அலுவலகங்களில் 11 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்தும், தமிழ்நாடு மின்னணு நிறுவனம் திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அலுவலகம், மாநகராட்சி கோட்ட அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் 9 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து 01.01.2016 முதல் ஆதார் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆதார் எண்ணிற்கென ஏற்கனவே பதிவு செய்து இந்திய தனித்துவ அடையாள ஆணையதத்தின் வாயிலாக ஆதார் எண் வழங்கப்பெற்றவர்கள் ஒருமுறைக்கு மேல் எத்தனை முறை மீண்டும் பதிவு செய்தாலும் புதிய ஆதார் எண் பெற இயலாது. ஆதார் எண் பெறுவதற்கு ஒரு முறை பதிவு செய்தாலே போதுமானதாகும்.

 

ஆதார் மையங்கள்

 

ஆதார் அட்டைக்கு பதிவு செய்து ஆதார் எண் அல்லது ஆதார் அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவாகள் தங்களது ஆதார் எண்ணை தெரிந்துகொள்ள ஏதுவாக, தற்போது தமிழ்நாடு மின்ஆளுமை முகமை "ஆதார் உதவி மையங்களை" அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அமைத்துள்ளது. இம்மையங்களை 28-02-2017 வரை மட்டுமே செயல்படும்.

எனவே இந்த ஆதார் உதவி மையங்களில் ஆதார் எண்ணிற்கு ஏற்கனவே பதிவுகளை செய்துவிட்டு ஆதார் எண்ஃஆதார் அட்டை கிடைக்கப்பெறாத பொதுமக்கள் மற்றும் ஆதார் அட்டையை தொலைத்தவர்கள் நேரில் சென்று தங்களது பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீடு எண், கைவிரல் ரேகை மற்றும் கருவிழிகளை பதிவு செய்து சில வினாடிகளில் தங்களின் ஆதார் எண்ணை அறிந்து கொள்ளலாம். கிடைத்த ஆதார் எண்ணை சம்மந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலக அரசு இ-சேவை மையங்களில் காண்பித்து விரல்ரேகைஇ கருவிழியினை பதிவு செய்து ரு.30ஃ- மட்டும் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டையாகவோ அல்லது ரு.10- மட்டும் செலுத்தி காகிதத்தில் அச்சிட்டோ பெற்றுக்கொள்ளலாம்.

எனவே ஆதார் எண்ணிற்கு ஒருமுறை பதிவு செய்தவர்கள் திரும்ப திரும்ப நிரந்தர ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல தேவையில்லை என்றும், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதார் உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி. தெரிவித்துள்ளார்.

 

Chicken Lollipop Recipe in Tamil | சிக்கன் லாலிபாப் | Chicken Recipes in Tamil

Falooda Recipe in Tamil | பலூடா | Sweet Dessert Recipe

Murungai Keerai Soup inTamil | முருங்கை கீரை சூப் | Drum Stick Leaves Soup in Tamil | Vegetable Soup

Dhaniya Paneer Recipe in Tamil | தனியா பன்னீர் | Paneer Recipe in Tamil | Paneer Gravy

Chicken Chukka in Tamil | சிக்கன் சுக்கா | Chicken Chukka Varuval in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்: