முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொங்கலை முன்னிட்டு 30 வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள்

திங்கட்கிழமை, 16 ஜனவரி 2017      திண்டுக்கல்
Image Unavailable

  வத்தலக்குண்டு - திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியில் பள்ளி மாணவ,மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் என இளைய சமுதாயத்தினர் பாரம்பரிய விளையாட்டுகளை மறக்காமல் பின்பற்ற பொங்கலை முன்னிட்டு 30 வகையான பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பட்டிவீரன்பட்டியில் உள்ள நண்பர் குழு சார்பாக ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டு 42 ஆண்டுகளாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பள்ளி மாணவ,மாணவிகள், பெண்கள், இளைஞர்கள் என இளைய சமுதாயத்தினர் மறவாமல் பின்பற்ற வேண்டி இந்த போட்டிகளை நடத்தி வருகின்றனர். சாக்கு ஓட்டம், நோண்டி விளையாட்டு, மைதா மாவு ஊதும் போட்டி, தவளை ஓட்டம், பன்ரொட்டி சாப்பிடும் போட்டி, எலுமிச்சம் பழ போட்டி என பள்ளி மாணவ,மாணவிகளுக்கான போட்டிகளும், பெண்களுக்கு கோல போட்டி, லக்கி கார்னர், பாட்டிலில் தண்ணீர் நிரப்பும் போட்டி, கயிரில் முடிச்சு போடும் போட்டியும், இளைஞர்களுக்கு சட்டி உடைத்தல்,தண்ணீர் குடிக்கும் போட்டி என நம் தமிழர்களின் பாரம்பரியமான 30 வகையான விளையாட்டு போட்டிகளை நடத்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகளை பட்டிவீரன்பட்டி முன்னாள் பேரூராட்சி மன்ற து

ணைத் தலைவர் ராஜசேகரன், இந்து நாடார்கள் பரிபாலன சங்க செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் வழங்கினார்கள். இப்பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். பார்வையாளர்களின் கூட்டமும் அதிகளவில் இருந்தது. இப்போட்டிகான ஏற்பாடுகளை நண்பர்கள் குழு தலைவர் விசு, மணிகண்டன், சக்தீஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர். இது பற்றி போட்டிகளை நடத்தியவர்கள் கூறியதாவது, தற்போது அனைத்து தரப்பினரும் பேஸ்புக், வாட்ஸ் அப் என இண்டர்நெட்டில் தங்களது ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கின்றனர். பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இதனை நடத்தி வருவதாக தெரிவித்தனர். முடிவில் அம்மா பேரவை நகர செயலாளர் விசு நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago