முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி உள்பட மூவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      இந்தியா
Image Unavailable

மும்பை  - ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி, பீட்டர் முகர்ஜி மற்றும் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது சி.பி.ஐ. கோர்ட்டில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஷீனா போரா கொலை
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி(43) பெற்ற மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திராணி ஏற்கனவே நடந்த இரு திருமணங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள் மூலம் பிறந்த 3 பிள்ளைகள் பற்றிய விவரத்தையும் மறைத்து பீட்டர் முகர்ஜியை மூன்றாவதாக மணந்ததாக கூறப்படுகிறது.

3 பேர் கைது
பீட்டர் முகர்ஜிக்கு அவருடைய முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை ஷீனா போரா முறை தவறி காதலித்ததால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கு இந்திராணியின் 2–வது கணவர் சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர். இந்த கொலை வழக்கில் இந்திராணி, சஞ்சீவ் கன்னா, கார் டிரைவர் ஷாம் ராய் ஆகிய 3 பேரையும் மும்பை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூவரும் மும்பையில் உள்ள ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதிக்கு கடிதம்
இதற்கிடையில், இவ்வழக்கை விசாரித்துவரும் மும்பை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதிக்கு இந்திராணியின் முன்னாள் கார் டிரைவரான ஷாம் ராய் ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஷீனா போரா கொலை தொடர்பாக தனக்கு தெரிந்த உண்மைகளை கோர்ட்டில் தெரிவிக்க விரும்புவதாகவும் தனக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

குற்றப்பத்திரிகை
இந்நிலையில், ஷீனா போரா கொலை வழக்கில் இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி மற்றும் முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மீது நேற்று சி.பி.ஐ., நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கொலை மற்றும் கிரிமினல் சதி ஆகிய குற்றப்பிரிவின்கீழ் இந்த குற்றப்பத்திரிகையில் மேற்கண்ட மூவரும் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்