மான் வேட்டை இருவர் கைது

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      நீலகிரி

பவானிசாகர் வனத்தில் மான் வேட்டையாடிய இருவர்  கைது செய்யப்பட்டனர். மேலும், இருசக்கர வாகனங்களில் மான் இறைச்சியுடன் வந்த 5 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

பவானிசாகர் வனப் பகுதியான காடேபாளையத்தில் வனத் துறையினர் திங்கள்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் சோதனையிட்டபோது சாக்குப் பையில் மான் இறைச்சி கடத்திச் செல்வது தெரியவந்தது. அவர்களிடமிருந்த மான் தலை, கால், இறைச்சி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில்,  ஒத்தபணங்காட்டைச் சேர்ந்த சாமிநாதன், மாரன் என தெரியவந்தது. மேலும், இருசக்கர வாகனங்களில் வந்த 5 பேர் வனத் துறையினரைக் கண்டதும் தப்பியோடினர். பிடிபட்டவர்கள் அளித்த தகவலின்படி, தப்பியோடியவர்களிடம் 30 கிலோ மான் இறைச்சி இருப்பதும் தெரியவந்துள்ளது.

மேலும், ஒத்தபணங்காடு வனத்தில் சுருக்கு கம்பி வைத்து அதில் சிக்கிய 2 மான்களை கொன்று, அதன் இறைச்சியைக் கடத்தியதும், இதில், 7 பேர் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தப்பியோடியவர்களை வனத் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: