கொங்கு கல்லூரியில் வர்த்தகச் சந்தை

செவ்வாய்க்கிழமை, 17 ஜனவரி 2017      ஈரோடு

ஈரோடு அருகே நஞ்சனாபுரத்தில் உள்ள கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் 6-ஆவது ஆண்டு வர்த்தகச் சந்தை அண்மையில் நடைபெற்றது. கல்லூரி நிர்வாக மேலாண்மைத் துறை சார்பில் நடத்தப்பட்ட இச்சந்தையை, கல்லூரித் தாளாளர் ஏ.கே.இளங்கோ தொடக்கி வைத்தார். கல்லூரி முதல்வர் என்.ராமன் முன்னிலை வகித்தார். இச்சந்தையில் 26 மாணவ, மாணவிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. கல்லூரி மாணவ, மாணவிகளின் தயாரிப்பான ஆயத்த ஆடைகள், கிராமிய உணவுகள், பூந்தொட்டிகள், பொம்மைகள், கைப்பைகள், திரைச் சீலைகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நிர்வாக மேலாண்மை துறைத் தலைவர் பூங்கொடி, பேராசிரியர்கள் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்: