முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் 28வது சாலை பாதுகாப்பு வாரவிழா துவக்கம்

புதன்கிழமை, 18 ஜனவரி 2017      மதுரை
Image Unavailable

மதுரை, - 28 வது சாலை பாதுகாப்பு வாரா விழா நேற்று மதுரையில் துவங்கியது, இந்த விழா வருகிற 23ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மதுரையில் உள்ள கப்பலுார், எளியார்பத்தி, சிட்டம்பட்டி, சுங்கச்சாவடி வழியாக வரும் அனைத்து ரக வாகன ஓட்டுநர்கள் நடத்துநர்கள் மற்றும் பாதசாரிகளுக்கு சாலை பாதுகாப்பு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு சாலை விதிமுறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு பற்றி வழியுறுத்தப்பட்டது. வாகனங்களில் மிளிரும் முகப்பு விளக்குகளில் கறுப்பு ஸ்டிக்கர் மேலும் வாகனத்தின் பின்புற ம் சிவப்பு நிற பிரதிபலிப்பான் பக்கவாட்டில் இருபுறம் மஞ்சள் முன்புறம் வெள்ளி நிற பிரதிபலிப்பான்கள் ஒட்டப்பத்தது. வாகனங்களில் ஏற்படும் குறைபாடுகளை உடனுக்குடன் சரிசெய்யும் மிதமான வேகத்தில் வாகனத்தை இயக்கவும் சரக்கு வாகனத்தில் ஆட்கள், அதிகம் பாரம் ஏற்ற கூடாது. வாகனத்தில் ஆவணங்களை வாகனத்தில் வைக்கவும், தேசிய நெடுஞ்சாலைகளில் குறைவேக கனரக வாகனங்கள் சாலை யில் இடது புறம் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மதுரை (தெற்கு) சிங்காரவேலு, (வடக்கு) கல்யாணகுமார், செயலாக்கம் ரவிச்சந்திரன், மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சுங்கச்சாவடி மேற்பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago